ஆடுறதுக்கு முன்னாடியே அவுட்னா எப்படி.. ரைட் ஹேண்டை விளாசிய மாஸ் நடிகர்.. ரொம்ப அப்செட்டாம்!

By Staff

சென்னை: எப்படியும் ரேஸ்ல நம்ம தான் ஜெயிப்போம் என நினைத்து அசால்ட்டா விட்ட நிலையில், அமைதியாக டாப் நடிகர் முதல் ரேஸிலேயே வெற்றி வாகையை சூடியது மாஸ் நடிகரை பயங்கர அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாம்.

எல்லாத்தையும் தனது டீம் பார்த்துப்பாங்கன்னு நினைச்சி ப்ரமோஷன் எல்லாம் பண்ணிய நிலையிலும், போட்டி இல்லைன்னு நினைச்ச நடிகரே பெரிய போட்டியாக வந்து நிற்பதை பார்த்து ஷாக் ஆகி விட்டாராம்.

தயாரிப்பாளருக்கும் தனது ரைட் ஹேண்டிற்கும் செம டோஸ் விட்டுள்ளார் மாஸ் நடிகர் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

எதையுமே ஒழுங்கா பண்றதில்லை

எதையுமே ஒழுங்கா பண்றதில்லை

ஷூட்டிங் ஸ்பாட் முதல் ஆடியோ லாஞ்ச் வரை எங்கே சென்றாலும் ஏதாவது பிரச்சனை ஏன் என்னை துரத்திக் கொண்டு வருகிறது. அதையெல்லாம் கவனித்துக் கொள்ளத்தானே உங்களை வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் நானே பார்க்கணும்னா நீங்க எல்லாம் எதுக்கு என தனது ரைட் ஹேண்டை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம் மாஸ் நடிகர்.

ஆரம்பத்திலேயே அவுட்

ஆரம்பத்திலேயே அவுட்

மேட்ச்சே இன்னும் ஆரம்பிக்கவில்லை. முதல் பந்திலேயே அவுட் ஆகி விட்டால் எப்படி மேன் ஆஃப் தி மேட்ச் ஆவது என தயாரிப்பாளருக்கும் டோஸ் விட்டு இருக்கிறாராம். கொஞ்சம் ஒரு நாள் வெயிட் பண்ணி உங்க ஊர்ல ரிலீஸ் பண்ணியிருக்கலாமே என்றும் கேட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பயங்கர அப்செட்

பயங்கர அப்செட்

கடந்த ஆண்டு வெளியான படத்தின் மூலமாகவே அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகராக மாறிய நிலையில், ட்ரெய்லர் வெளியானதுமே மீண்டும் அதிகம் ட்ரோல் செய்யப்படும் நடிகராக தான் மாறியதை பார்த்து பயங்கர அப்செட் ஆகி உள்ளாராம். ஜாலியா ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சாலும் சீரியஸ் மோடுக்கே தன்னை கொண்டு போறாங்க என கடுப்பாகி ஷூட்டிங்கில் கத்தியதை விட பயங்கரமாக கத்தி விட்டார் எனக் கூறுகின்றனர்.

விடக் கூடாது

விடக் கூடாது

இது போனால் போகட்டும் அதுதான் முடிந்து போச்சே.. அடுத்து ரிலீஸ் போட்டியிலாவது பாக்ஸ் ஆபிஸ் நம்ம பக்கம் வரும் வேலைகளை தீவிரமாக செய்யுங்க, அங்கேயும் கோட்டையை விட்டுட்டு வந்து என் முன்னாடி அப்பாவியா நிற்காதீங்க என மீண்டும் நார்மல் மோடுக்கு வந்து தனது வலது கரத்தை உற்சாகப்படுத்தி அடுத்தக்கட்ட வேலைகளில் தீவிரம் காட்ட சொல்லி உள்ளார் மாஸ் நடிகர் என கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சாக நிலவி வருகிறது.

வேகம் எடுத்த டீம்

வேகம் எடுத்த டீம்

அதன் பிறகு தான் அதிரடியாக வேகம் எடுத்து போட்டியில் முந்துவதற்கான வேலைகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். ரிலீஸ் தேதியிலும் கடைசி நேரத்தில் மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அறிவித்த தேதியை விட ஒரு நாள் முன்னதாக மாலை காட்சிக்கே ரிலீஸ் செய்யவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோடம்பாக்கமே பரபரப்பாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X