அப்போ மாஸ் நடிகருக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதா? மறுபடியும் பழையபடி ஆனால், என்ன ஆகும்?

By Staff

சென்னை: மாஸ் நடிகர் உடன் இந்த முறை நேரடி போட்டிக்கு டாப் நடிகர் மோதி பார்த்து விட முடிவு கட்டி விட்டார்.

எப்படியும் டாப் நடிகரின் படம் சொன்ன தேதிக்கு வராது, போட்டியை தவிர்த்து விடுவார் என எதிர்பார்த்த நிலையில், இந்த முறை போட்டி போட மும்முரம் காட்டி வருகிறார்.

மேலும், அந்த பெரிய நிறுவனம் டாப் நடிகரின் படத்தை வாங்கி உள்ள நிலையில், மாஸ் நடிகர் படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்கிற சந்தேகமும் கிளம்பி உள்ளது.

வெறித்தனமான போட்டி

வெறித்தனமான போட்டி

வரும் பெரிய பண்டிகையை டார்கெட் செய்து தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் மோதிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால், இன்னமும் இருவரும் படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. ஒருவர் அறிவித்ததும் இன்னொருவர் அறிவிக்கலாம் என பொறுமையாக வெயிட் பண்ணி வருகின்றனர்.

இழப்பு ஏற்படும்

இழப்பு ஏற்படும்

இரு பெரும் நடிகர்களும் இந்த முறை பல ஆண்டுகள் கழித்து நேருக்கு நேர் ஒரே நாளில் மோதிக் கொண்டால் நிச்சயம் தியேட்டர்கள் பிரியும் வசூல் கண்டிப்பாக பாதியாக உடைந்து இருவருக்கும் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஒரு படம் சூப்பராக இருந்து, இன்னொரு படம் கொஞ்சம் சொதப்பினாலும் பெரிய இழப்பு ஏற்படும்.

பெரிய நிறுவனம்

பெரிய நிறுவனம்

அந்த பெரிய நிறுவனத்துக்கு இந்த முறை படத்தை கொடுக்க வேண்டாம் என நேரடியாக மாஸ் நடிகரே சொல்லி விட்ட நிலையில், தான் இந்த போட்டியையே அந்த நிறுவனம் ஆரம்பித்தது என்றும் நடிகர் ஆரம்பத்தில் வேண்டாம் என நினைத்து வந்த நிலையில், அந்த பெரிய நிறுவனம் முடிவெடுத்த நிலையில், நடிகரால் மறுப்பு சொல்ல முடியவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

தியேட்டர்கள் குறையும்

தியேட்டர்கள் குறையும்

ஏகப்பட்ட செல்வாக்கு உள்ள அந்த பெரிய நிறுவனம் டாப் நடிகரின் படத்தை வெளியிட உள்ள நிலையில், மாஸ் நடிகருக்கு இது பலத்த அடியை ஏற்படுத்தும் என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. கண்டிப்பாக டாப் நடிகருக்குத் தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் மாஸ் நடிகருக்கு தியேட்டர்களின் எண்ணிக்கை சற்றே குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கலில் மாஸ் நடிகர்

சிக்கலில் மாஸ் நடிகர்

மாஸ் நடிகருக்கு கடந்த முறை அந்த பெரிய படத்துடன் போட்டி போட்ட நிலையிலேயே பெரும் சொதப்பல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அப்படியொரு நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. ஏற்கனவே அந்த பாதுகாப்பாளராக நடித்த படத்திற்கும் இதே போலத்தான் ஒரு பெரிய நிறுவனம் தியேட்டர்களை வாரி சுருட்டிக் கொண்டு தர வில்லை அதே நிலை மீண்டும் நடந்தால் பெரும் சிக்கல் உருவாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்கிற தீவிர ஆலோசனையில் நடிகர் இருந்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X