»   »  "ஆன்ட்டி" ஹீரோயின்களை கைவிட்ட "அங்கிள்" ஹீரோக்கள்.. வரன் தேடும் படலத்தில் தாய்க்குலங்கள்!

"ஆன்ட்டி" ஹீரோயின்களை கைவிட்ட "அங்கிள்" ஹீரோக்கள்.. வரன் தேடும் படலத்தில் தாய்க்குலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபகாலமாக மூத்த நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக்க தயங்குகிறார்களாம் இன்னமும் இளம் ஹீரோக்கள் எனச் சொல்லிக் கொள்ளும் 40 வயதைத் தாண்டிய மாஸ் நடிகர்கள்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர்களாக சின்ன மற்றும் பெரிய நம்பர் நடிகை, ராணி நடிகை என சில நடிகைகள் உள்ளனர். இவர்களின் கடந்த சில படங்கள் புதிய இளம் நடிகர்கள் மற்றும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைக் கொண்டது.

காரணம் தங்களது வயதைக் குறைத்துக் கொள்ளத்தான் இப்படி அவர்கள் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. ஆனால், உண்மை அது மட்டுமில்லையாம். தமிழில் முன்னிலையில் உள்ள மூத்த நடிகர்கள் இந்த நடிகைகளைத் தங்களது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதில்லையாம்.

ஏனென்றால் ஏற்கனவே இளம் நாயகர்கள் படையெடுத்து வரும் நிலையில், தங்களது இடத்தை தக்க வைக்க போராடி வரும் இவர்கள், மூத்த நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து தங்களது வயதை தாங்களே தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை. எனவே, தமிழில் இளம் நாயகிகளாகப் பார்த்து புதிய படங்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்களாம்.

அதிலும் சின்னப்பூ, பால் நடிகைக்கு தான் அதிகமாக வாய்ப்புகள் போகிறதாம். அடுத்த இடத்தில் கீர்த்தியான நடிகை, பூனை நடிகை போன்றவர்கள் இருக்கிறார்களாம்.

இதனால், கூடிய சீக்கிரம் பட வாய்ப்புகள் கரைந்து காணாமல் போய் விடும் என சுதாரித்துக் கொண்ட சம்பந்தப்பட்ட மூத்த நடிகைகளின் தாய்க்குலங்கள், மகளின் ஜாதகங்களைக் கையில் எடுத்துள்ளார்களாம்.

தீவிரமாக தொழிலதிபர் மாப்பிள்ளைகளாக வலை வீசி தேடி வருகிறார்களாம். இதனால், அடுத்தடுத்து சீனியர் நாயகிகளுக்கு டும் டும் டும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
As the mass heroes are avoiding senior heroines in their movies, they are getting ready to marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil