»   »  மாப்பிள்ளை தேடும் மீனா

மாப்பிள்ளை தேடும் மீனா

Subscribe to Oneindia Tamil

நடிகை மீனாவுக்கு மும்முரமாக மாப்பிள்ளை பார்க்கும் வேலை நடக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடலில் உருவாகும் கண்ணம்மா திரைப்படம் கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டது. இந்தப் படத்தில் டிவி நடிகர்களான வெங்கட், பிரேம்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடிகைகள் மீனா, விந்தியா நடிக்கின்றனர்.

இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. கருணாநிதி எழுதிய 4 பக்க வசனத்தை அழகாகக் பேசி பாராட்டுவாங்கினாராம் மீனா. விரைவில் படம் முழுமையடைந்ததும் கருணாநிதி அதைப் பார்க்கவுள்ளார். பிப்ரவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து விட்டதால் மீனா கையில் இப்போது 2 படங்களே உள்ளன. அதில் ஒன்று எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில்உருவாகும் அன்புள்ள நண்பரே.

இப் படத்திற்கு முதலில் பி.எப் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் அன்புக் கட்டளைக்குப் பிறகு படத்தின்பெயர் மாற்றப்பட்டது.

இந்தப் படத்தில் மீனா நாயகி இல்லை. அதற்கு சிந்து துலானி இருக்கிறார். நியூ படத்தில் கிரண் நடித்தது போன்ற ஒரு கெரக்கமூட்டும்வேடமாம் மீனாவுக்கு.

இது தவிர மானிடன் என்ற படத்தில் மீனா நடிக்கிறார். இதிலும் கொஞ்சம் கசமுச வேடம் தான் மீனாவுக்கு. காதல் வர வேண்டிய இளம்வயதில் ஒரு இளைஞன் காமத்தால் துடிக்கிறானாம். அந்த இளைஞனுக்கு அண்ணியாக மீனா நடிக்கிறாராம்.

இதற்கிடையே ரப்பர் டேன்சரின் வலையில் மீண்டும் சிக்கி மீண்டிருக்கிறார் மீனா என்கிறார்கள். முன்பு இருவரும் கல்யாணம் செய்துகொள்ளும் அளவுக்கு நெருங்கிப் பழக இடையில் பாய்ந்த மீனாவின் அம்மா மல்லிகா, மகளை படாதபாடு பட்டு மீட்டார்.

ஆனால், நடிகரும் மீனாவும் இப்போது வாய்ப்பு இல்லாமல் வீட்டில் குந்திக் கொண்டிருப்பதால் மீண்டும் இருவருக்கும் இடையே டச்ஆரம்பித்ததாம். ஆனால் இம்முறையும் ரப்பரிடம் இருந்து மகளைக் காப்பாற்றிவிட்டாராம் மல்லிகா.

இதையடுத்து மகளுக்கு சட்புட்டென்று திருமணம் செய்து வைத்துவிட அம்மா தயாராகிவிட்டார். இதுவரை, இப்போ வேண்டாம் என்றுசொல்லி வந்த மீனாவும் கூட திருமணத்துக்குத் தயாராகிவிட்டாராம்.

அண்மையில் நல்ல கணவன் அமைய வேண்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார். அதோடு கருமாரியம்மன் கோயிலும் மீனாவைஅடிக்கடி பார்க்க முடிகிறது.

சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் மீனாவின் பெயர் விவரத்தைச் சொல்லாமல் மாப்பிள்ளை தேவை விளம்பரமும்கொடுத்தார்களாம். நிறையவே ரெஸ்பான்ஸ்கள் வந்தாலும் மீனா வீட்டிற்கு ஒரே பிள்ளையாதலால், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கவிருப்பம் தெரிவிப்பவர்களைத் தேடி வருகிறார் மல்லிகா.

அம்மா மாப்பிள்ளை தேட, மீனாவோ புதுசாக இரு நாய்களை வாங்கி வளர்த்து வருவதோடு தபால் மூலம் எம்.ஏ.(வரலாறு) படித்துக்கொண்டிருக்கிறார்.

Read more about: actress, cinema, groom, kollywood, meena, ramya, sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil