»   »  மீனாவின் தேடல்

மீனாவின் தேடல்

Subscribe to Oneindia Tamil

நல்ல இடமாக அமைந்தால் மகளைக் கட்டித் தரும் முடிவில் மீனாவின் தாயார் இருக்க, ஆனால், இன்னும் கொஞ்சம் நாள் தொடர்ந்து நடிக்கவாய்ப்பு தேடி வருகிறார் மீனா.

மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தாலும், கடைசி கடைசியாக முடிந்தவரை சில படங்களில் நடித்துவிடும் அதீத ஆர்வத்தில் இருக்கிறார்மீனா.

மீனாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது இது முதல் முறையல்ல. தமிழில் ஹீரோயின் வாய்ப்புக்களை எல்லாம் மும்பை நடிகைகள் கடந்த சிலஆண்டுகளுக்கு முன் பறிக்க ஆரம்பித்தவுடனேயே மீனாவை செட்டில் ஆக்கிவிட முயன்றார் அவரது தாயார் மல்லிகா.

ஆனால், மீனா தான் அதைத் தள்ளிப் போட்டார். தமிழ் இல்லாவிட்டால் என்ன என்று கன்னடம், மலையாள படங்களில் நடித்தார்.அப்படியே 2 வருடம் ஓடிவிட்டது. இப்போது அங்கும் மீனாவுக்குப் பெரும் தேக்கம் ஏற்பட்டுவிட்டது.

கையில் வாய்ப்புகள் இல்லை. இதனால் ரம்பா ஸ்டைலில் மும்பையில் நடிக்கத் திட்டமிட்டு தாராள போஸ் கொண்ட ஆல்பங்களைஅனுப்பிப் பார்த்தார். ஆனால், ரம்பாவுக்கு உதவ கோவிந்தா, மிதுன் சக்கரவர்த்தி (இவர் இன்னும் நடிக்கிறார்) போன்றவர்கள் முன்வந்ததால் சில வாய்ப்புக்கள் கிடைத்தன.

மீனாவுக்கு அப்படி உதவ அங்கு யாரும் சிக்கவில்லை. இதனால் யாராவது சிக்க மாட்டார்களா என்று நூல்விட்ட வண்ணம் இருக்கிறார்மீனா.

சமீபத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் சென்னையில் நடந்த இந்தி பட சூட்டிங்கில் நடிக்க வந்த சல்மான் கானுக்கு போன் மேல் போன்போட்டுப் பேசினாராம் மீனா. எங்க கெஸ்ட் ஹவுசில் (மீனாவின் வளசரவாக்கம் பங்களா) தங்கிக்கலாமே, ஏன் ஹோட்டலில் தங்கனும்என்று கொஞ்சினாராம்.

ஆனால், சல்மான் தப்பிவிட்டார். எனக்கு ஹோட்டல் தான் செளகர்யம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டுவிட்டார். பின்னர் அவரிடம் மும்பைபட சான்ஸ் பற்றியும் மீனா பேச, பார்க்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாராம்.

இப்போதைக்கு தமிழில் மானிடன், கலைஞரின் கண்ணம்மா ஆகிய இரு படங்களில் மீனா நடித்து வருகிறார். அடுத்து எஸ்.ஜே. சூர்யாஇயக்கும் பெஸ்ட் பிரண்ட் படத்தில் கன்னா பின்னாவாக கவர்ச்சி காட்டும் ஒரு வேடத்தில் நடிக்க மீனா தலையாட்டியிருக்கிறார்.

வேறு வாய்ப்புக்கள் ஏதுமில்லாததால், முடிந்தவரை சில படங்களில் நடித்து துட்டு சம்பாதிக்கும் மூடுக்கு வந்துவிட்ட மீனா, மார்க்கெட்பிடிக்க என்ன தாராளம் காட்டவும் தயங்காமல் முன் வந்துள்ளார்.

மானிடன் படத்திலும் மீனாவுக்கு படு ஹாட்டான ரோல் தான். கல்யாணத்துக்கு முன் கடைசி படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்என்பதால் தன் முழு திறமையையும் அள்ளிவிட்டு வருகிறார் மீனா.

இப்படி வாய்ப்பு தேடலில் மீனா ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும், நல்ல வசதியான மாப்பிள்ளை தேடல் படலமும் இன்னொரு பக்கம்மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

Read more about: actress, cinema, groom, kollywood, meena, ramya, sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil