»   »  மீராவின் கோப முடிவு!!

மீராவின் கோப முடிவு!!

Subscribe to Oneindia Tamil

தமிழ் பத்திரிக்கையாளர்களைப் பார்த்தாலே எரிந்து விழுகிறார் மீரா ஜாஸ்மின். தமிழ் சினிமாக்காரர்கள் மீதும் கடுங் கோபமாம் அம்மணிக்கு.

வேண்டுமென்ற தன்னைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதுதான் சேச்சியின் இந்த கோபத்திற்கு காரணம்.

தெலுங்கிலும், மலையாளத்திலும் மீராவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நேபாளி படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு கொஞ்ச நாளைக்கு தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தன் கோபத்தை வெளிப்படுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

இதனால்தான் சம்பளம் குறைவு என்றாலும் கூட சில கன்னடப் படங்களைக் கூட ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படித்தான் நயன்தாராவும் சிம்பு பிரச்னையில் தமிழுக்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அப்புறம் வம்படியாக நயனை தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் சிம்புவுக்கு எதிர் முகாமிலிருப்பவர்கள்.

மீராவும் தமிழை ஒதுக்கும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்ட நேரத்தில் இப்படியொரு விபரீத கோபம் தேவையா? என அவரது தோழிகள் அட்வைஸ் செய்யத் தொடங்கியிருக்கிறார்களாம்.

சரியான நேரத்தில், பொருத்தமான அட்வைஸ்தான்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil