»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

ஆடாதடா ஆடாதடா மனிதா என்று, காதை சொறிந்துவிடும் ஒரு மாதிரியான சொரசொரப்பான குரலில், விஜய்யின் அப்பாஎஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு படத்தில் பாடுவார். அந்தப் பாட்டு மீரா ஜாஸ்மினுக்கு அப்படியே பொருந்தும்.

முதல் தமிழ் படமான ரன், ஏதோ குருட்டாம்போக்கில் ஓடி விட்டதால் அப்படியே வானில் பறந்தார் மீரா. தாய் மொழியான மலையாளத்தில்அவர் கைவிடப்பட்டவர்.

ஆனால் தமிழில் அவருக்கு முதல் படம் ஹிட் ஆனதால் இந்தியாவிலேயே தன்னைப் போல ஒரு நடிகை இருக்க முடியுமா என்ற மிதப்பில்தமிழ் திரையுலகை மலையாள இன்டலக்சுவல் சினி பீல்டுடன் ஒப்பிட்டு சரமாரியாக விமர்சிப்பதும், தமிழ் பத்திரிக்கையாளர்களிடம்பேசவே மறுப்பதும் என பம்மாத்து பண்ண ஆரம்பித்தார்.

தமிழ்ப் பட இயக்குனர்களுக்கு மெச்சூரிட்டி போதாது என்றெல்லாம் திமிர்வாதம் பேசி வந்தார். அவரை தமிழ் சினிமா பார்ட்டிகள்அப்படியே ஒதுக்க வைக்க ஆரம்பிக்க, வேறு வழியே இல்லாமல் தெலுங்குக்குப் போனார். அங்கு அவரை முடிந்தவரை யூஸ் செய்துவிட்டுஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நிற்க.

மீரா விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு, மாதவன் பக்கமாக கேமராவை பேன் செய்வோமா?

சமீபகாலமாக மாதவன் ஒரு பாலிஸி வைத்திருக்கிறார்.

அவருடன் ஜோடி சேரும் நடிகைகளுக்கு காதலன் இருக்கக் கூடாது. காதல் கிசுகிசுவில் சிக்கினாலும் கூட அவருடன் சேர்ந்துநடிக்க மாட்டார்.

மணல் கயிறு பட எஸ்வி சேகர் மாதிரி எக்குதப்பு பாலிஸி வைத்துள்ள மாதவனுக்கு ஜோடி தேடுவது இயக்குனர்களுக்குபெரிய தலைவலியாக இருக்கிறது.

ப்ரியசகி படத்தில் மாதவனுக்கு ஜோடி தேடி அலையோ அலை என்று அலைந்தார் இயக்குனர். ஒவ்வொரு ஆளாக ரிஜெக்ட்செய்து கடைசியில் சதாவுக்கு ஓகே சொன்னார் மாதவன்.

இப்படித்தான் தம்பி படத்துக்கு மாதவன் ரிஜெக்ட் செய்த ஹீரோயின்கள் பட்டியலும் ரொம்ப நீளம். சோனியா அகர்வால்,ஜோதிகா, ஸ்னேகா என இயக்குனர் சீமான் சொன்ன பெயர்களுடன் செல்வராகவன், சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோரை முடிச்சுபோட்டு, இந்த நடிகைகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மேடி.

கடைசியில் ஆஷின் ஓ.கே. என்று மாதவன் சொல்ல, ஆஷினோ மாதவனா நோ-நோ என்று சொல்லிவிட்டார். இதையடுத்துமலையாள செக்ஸ் பாம் ராகசுதாவை ஹீரோயினாகப் போடப் போகிறோம் என்று இயக்குனர் தரப்பில் இருந்தே புகையைகிளப்பிவிட்டார்கள்.

பயந்து போன மாதவன் கடைசியில் கன்னடம்- தெலுங்கில் தாராளம் காட்டி வரும் நிகிதாவை ஹீரோயினாக்க சம்மதித்தார்.

நிகிதாவும் தெலுங்கு இயக்குனர் தசரத் என்பவரை காதலித்து, கைவிட்டுவிட்டு இப்போது இன்னொருவரை காதலிப்பதாகபேச்சுண்டு. ஆனாலும், ராகசுதா தூக்கத்தில் வந்து பயமுறுத்தியதாலோ என்னவோ நிகிதாவுக்கு ஓகே சொன்னார் மாதவன்.

இப்படிப்பட்ட மாதவனிடம் போய் மீரா வாங்கிக் கட்டிய கதை தான் மேலே நாம் கொடுத்த பில்ட்-அப் பார்ட்டுக்கானகாரணம்.

மாதவனின் காதல் எதிர்ப்பு பாலிஸி தெரியாத மீரா ஜாஸ்மீன் சமீபத்தில் அவரை நேரில் வலுக்கட்டாயமாய் போய்சந்தித்திருக்கிறார்.

நாம் இருவரும் சேர்ந்து நடித்த ரன் படம் ரொம்ப நல்லா ஓடிச்சில்லே என்று ஆரம்பித்து சிறிது நேரம் கதைத்திருக்கிறார்மீரா. மேடியும் தலையை ஆட்டியபடியே கேட்டிருக்கிறார்.

இனிமே உங்களுக்கு வர்ற படங்கள்ல என்னை ஹீரோயினா சிபாரிசு செய்யுங்களேன் என்று மீரா நேரடியாகவே கேட்டுவைக்க, மாதவன் டக்கென்று நேரடியாகவே நோ சொல்லிவிட்டாராம்.

அதெல்லாம் சரியா வராது என்று மாதவன் முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிட, கடுப்பாகிப் போய் ஹோட்டல் ரூமுக்குத்திரும்பி வந்திருக்கிறார் மீரா.

மீரா- பெரியவர் லோகிததாஸ் காதல் விவகாரம் ஊரறிந்தது. அவருக்காக மீரா சொந்தக் காசைப் போட்டு கஸ்தூரிமான்படத்தை எடுப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதல் காரணமாகத் தான் மீராவுக்கு மாதவன் மறுப்பு சொன்னார் என்கின்றனகோடம்பாக்கம் குருவிகள்.

லோகிததாஸ் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயின் மீரா தான், ஹீரோவாக பிரசன்னா நடிக்கிறார். இப் படத்துக்கு இசைஇளையராஜா. இந்த சொந்தப் படத்தைத் தவிர மீராவிடம் உள்ளே ஒரே பட வாய்ப்பு, சேரன் இயக்கும் பொக்கிஷம் தான்.அதில் சேரனுக்கு ஜோடி மீரா. ஆனால், படத்தின் சூட்டிங்கை சேரன் எப்போது தொடங்குவார் என்பது அவருக்கேதெரியாது.

இந்தப் படத்தை விட்டால், மற்றபடி தமிழில் மீராவுக்கு சான்ஸ் ஏதுமில்லை. தெலுங்கிலும் நிலைமை மோசம். இதனால் தான்விவரம் தெரியாமல் மாதவனிடம் போய் சான்ஸ் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பி வந்திருக்கிறார் மீரா.

மாதவன் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நயனதாரவை புக் செய்திருக்கிறார்கள்.

நயனதாரா பார்த்தும்மா, சூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ள காதல் கீதல்ல விழுந்திறாதீங்க. தம்பி மாதவனுக்கு தெரிஞ்சாஅவ்வளவு தான்!

Read more about: actress, cinema, madhavan, meera jasmine, ramya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil