»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட் நடிகர்களை கிண்டல் செய்வதில் மீரா ஜாஸ்மின் உச்சத்திற்கே போய் விட்டார்.

சமீபத்தில் மீராவை ஒரு தயாரிப்பாளர் அணுகியுள்ளார். தனது படத்தில் நடிக்க ஒப்புதல் கேட்டுள்ளார்.

கதை, ஹீரோ குறித்துக் கேட்டுள்ளார் மீரா. கதை குறித்து ஒரளவு திருப்தியடைந்த மீரா, ஹீரோவின் பெயரைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம்.

"சார், நான் கேட்டது ஹீரோவின் பெயரைத்தான். தாத்தா, அப்பா கூட எல்லாம் என்னால ஜோடியா நடிக்க முடியாது. நீங்க கோடி கொடுத்தாலும் இவருடன்நடிக்க நான் தயாராக இல்லை. போய்ட்டு வாங்க" என்று கூறி விட்டாராம்.

தயாரிப்பாளர் எவ்வளவோ கெஞ்சியும் மசியவில்லையாம் மீரா.

இதைக் கேள்விப்பட்ட சம்பந்தப்பட்ட அந்த சத்தியமான ஹீரோ வெகுண்டு போய் விட்டாராம். "என்னைப் போய் தாத்தா என்று சொல்லி விட்டதாஅந்தப் பெண். நானே பெரிய லொள்ளு நடிகன். எனக்கே நக்கலா? நான் யார் என்று காட்டுகிறேன்" என்று சவால் விட்டுள்ளாராம் அவர்.

தமிழக நடிகர்களை அவ்வப்போது கிண்டலடிப்பதி மீராவின் பொழுதுபோக்காவிட்டதாக கோலிவுட்டில் புகார் சொல்கிறார்கள். எங்க மலையாளம்சினிமா அப்படி, இப்படி என்று தமிழக நடிகர்களை வெறுப்பேற்றுப்படி பேசுகிறாராம்.

மலையாளத்தில் எவ்வளவு சம்பளம் தருகிறார்கள், தமிழில் கொட்டித் தரப்படும் காசு எவ்வளவு என்பதை மட்டும் இவர்பேசுவதேயில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil