»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படங்களில் நடிக்கக் கூடாது என்று தடை விதித்த தன் காதலனுக்கு நடிகை மீரா ஜாஸ்மின் "குட்பை" கூறிவிட்டார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்று விட்ட மீரா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவரை "சூத்ரதாரன்" என்ற மலையாளப் படத்தில் அறிமுகப்படுத்தியவர் லோகிதா தாஸ்.

அன்று முதல் மீராவின் அனைத்து நடவடிக்கைகளையும் லோகிதா தாஸ்தான் பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்டமீராவைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் இவர்.

மலையாளத்தில் கொடிகட்டிப் பறந்த மீராவுக்கு "ரன்" படத்தின் மூலம் தமிழ் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின."ரன்" வெற்றியின் மூலம் முதல் படத்திலேயே உச்சாணிக் கொம்பை எட்டிவிட்டார் மீரா.

இதையடுத்து "பாலா" படத்திலும் மீரா நடித்தார். இப்படம் ஊத்திக் கொண்டபோதிலும், ரசிகர்களைக்கிறங்கடிப்பதால் தமிழில் அவருக்கு ஏகப்பட்ட கிராக்கிதான்.

ஆனால் மீரா தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு லோகிதா தாஸ் பெரும் தடையாக இருந்தார். ஏகப்பட்டவாய்ப்புக்கள் வந்து கதவைத் தட்டியபோதிலும், "பாலா" படத்திற்குப் பின்னர் அவர் தமிழில் நடிக்கக் கூடாது என்றுலோகிதா தாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் பல பெரிய தமிழ் நடிகர்களுடன் நடிப்பதற்கெல்லாம் மீராவுக்கு வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.மலையாளத்தில் கிடைக்காத வாய்ப்பு தமிழ் படங்களில் கிடைக்கும்போது இதை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று மீரா நினைத்தார்.

இதையடுத்து மலையாளப் பட உலகிற்கு மட்டுமல்லாமல் லோகிதா தாஸுக்கும் ஒரு பெரிய "குட்பை" போட்டுவிட்டார் மீரா. லோகிதா தாஸின் "டார்ச்சர்" காரணமாகவே அவரை மீரா காதலித்து வந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

காதல் பற்றிக் கேட்டால், "காதலாவது, கத்தரிக்காயாவது. எல்லாமே பொய். என்னைக் கவிழ்க்க திட்டம்போடுகின்றனர். என்னைப் பற்றி என் பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று மிகவும் தெளிவாகக் கூறினார்.

இதையடுத்து மீராவுக்கு தமிழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. பல தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் மீராவைமுற்றுகையிட்டுள்ளனர். தமிழில் அவர் ஒரு பெரிய "ரவுண்டு" வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய்யுடன் "கீதை" படத்திலும், அஜித்துடன் "மகா" படத்திலும் மீரா நடித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil