»   »  'விருது கிடைக்கலேன்னா கூட பரவால்ல... ஆனா இந்த துக்க விசாரிப்புதான் தாங்க முடியல!'

'விருது கிடைக்கலேன்னா கூட பரவால்ல... ஆனா இந்த துக்க விசாரிப்புதான் தாங்க முடியல!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பிரமாண்ட இயக்குநர் போன் 'ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள'தாக தகவல் வருகிறதாம்.

ஏன்?

இவர் இயக்கிய படம் கொஞ்சம் காலிப் பெருங்காய டப்பா ரகம்தான் என்றாலும், படத்தில் ஒல்லியாகி, குண்டாகி, அங்கங்கே வீங்கிப் போன மாதிரியெல்லாம் வேஷம் போட்டு கஷ்டப்பட்ட நடிகருக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லையே என்ற ஆளாளுக்கு அங்கலாய்க்கிறார்களாம்.

இதற்கு, 'சீச்சீ, அந்தப் பழம் புளிக்கும்' என்ற ரேஞ்சில் நடிகர் பதில் சொல்லிக் கொண்டிருக்க, பிரமாண்டமோ ஒருபடி மேலே போய் திட்டி அனுப்புகிறாராம்.

'அந்த விருது கிடைக்கலன்னாலும் பரவால்லய்யா... எல்லாோரும் என்கிட்ட துக்கம் விசாரிக்கிறத மட்டும் நிறுத்திக்குங்க...' என்று கூறி போனையும் ஆஃப் பண்ணி வைத்துவிட்டாராம்.

English summary
Mega director has switched off his mobile phone due to avoid friends inquiry about his recent movie's failure to fetch a national award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil