»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தாயான பின்பும் கதாநாயகி வேடம் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் மோகினி

ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மோகினி அறிமுகமானார்.
பெரிய நடிகர்களுடன் ஜோடிசேர வாய்ப்பு கிடைக்காமல், துண்டு துக்கடா நடிகர்களுடன் நடித்து வந்தார்.

பின்பு குஷ்பு அலை பலமாகவீசியபோது அடித்துச் செல்லப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவரானார்.

பெரிய திரையில் வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

அங்கு கொஞ்சகாலம் நடித்து தனதுகலைத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டவர் கல்யாணம் செய்து செட்டிலானார். ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும்சும்மா இருக்குமா?

ஒரு குழந்தைக்கு தாயாரான பின்பு, இப்போது திடீரென்று பெரிய திரையில் தலை காட்ட வேண்டும் என்ற ஆசைஅவருக்கு வந்துள்ளது. தப்பில்லைதான். அஜீத்துக்கு அண்ணியாகவோ, சூர்யாவுக்கு அக்காவாகவோ நடிக்கலாம்.

ஆனால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று ஒத்தைக்காலில் நிற்கிறார். குழந்தை பெற்ற பின்பு மோகினியின்உடல், சேட்டுக்கடை வட்டி போல் பெருகிவிட்டது. இப்போது அவருக்கு இருக்கும் உடல்வாகுக்கு குணச்சித்திரவேடங்கள்தான் கிடைக்கும்.

ஆனால், அக்காவாக நடிக்கிறீர்களா என்று யாராவது கேட்டால், நானா அக்காவா என்று திருப்பிக் கேட்கிறார்.இப்போது இவர் கதாநாயகியாக நடித்து அதை யார் பார்ப்பது? என்று தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கிறார்கள்.

ஆமாம் மோகினி! உங்கள் வீட்டில் கண்ணாடியே இல்லையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil