»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காக்கிறார் கமல். அவருக்குப் போட்டியாக சரிகாவும் முழு அமைதி காக்கிறார். சென்னையில் இருந்தபோதும் அவரை எந்தப் பத்திரிக்கையாளராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் கேட்டால் மும்பை போய்விட்டார் என்கிறார்கள். ஆனால், விசாரித்துப் பார்த்ததில் அவர் சென்னையில் தான் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. என்னமோ நடக்குது.

பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்த சிம்ரனின் தங்கை மோனலை வைத்து விஜயசாந்தி என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். பயங்கர ஆக்ஷன் படமாம். இதில் மோணல் சிலம்புச் சண்டை போடப் போகிறாராம். இதற்காக சிலம்பாட்டப் பயிற்சி செய்து வருகிறார் மோனல். இன்னொரு விஷயம், கமல் விவகாரத்தில் அறிவுரை சொல்ல முயன்ற தனது அம்மா மற்றும் உறவினர்களை திட்டி விரட்டி விட்டுவிட்டாராம் சிம்ரன். இதைத் தட்டிக் கேட்கப் போன மோனலுக்கும் திட்டு விழுந்தது. இதனால் உறவினர்கள் எல்லோரும் இப்போது மோனல் வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள். வீட்டில் பிரச்சனை இருக்கும்போது, சிலம்புச் சண்டை மாதிரி செல்ப் டிபென்ஸ் கலைகளை கத்து வச்சுக்கிறதும் நல்லது தான்.

தில் மூலம் தமிழில் அறிமுகமான மும்பை வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி அர்ஜீன் தயாரித்து வரும் ஏழுமலை படத்திலும் பயங்கர வில்லத்தனம் காட்டி இருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் வித்யார்த்தியை புக் செய்துள்ளார்கள்.

இரவுப் பாடகன் படத்தில் கும்தாஜ், படு பயங்கரமாக கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறாராம். டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபுவே மிரண்டு போகும் அளவுக்கு அவரது கவர்ச்சி இருக்கவே, இதுக்காகவே படம் பிச்சுக்கிட்டு ஓடும் என்ற நம்பிக்கையில் யூனிட் ஆட்கள் இருக்கிறார்களாம்.

மம்மூட்டி நடித்த நான்கு ஹீரோ சப்ஜெக்ட் படமான மலையாளத்து சூப்பர் ஹிட் வலியட்டன் (பெரியவர் என்று அர்த்தம்),தமிழில் டப் செய்யப்படுகிறது. படத்திற்குப் பெயர் பெரிய கவுண்டர் (அடப் பாவிகளா !). கவண்டருக்கும், மம்மூட்டிக்கும்என்னய்யா சம்பந்தம்?

ஈஸ்வரி ராவின் தங்கையும், பெரியண்ணா படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்தவருமான மானசா தனது பெயரை தனுஜா என்று மாற்றிக் கொண்டு விட்டார். பெயர் ராசியாம். இனி படங்கள் குவியப் போகுதாம்.

Read more about: actress, affair, cinema, heroin, kamal, monal, silambu, simran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil