»   »  மீண்டும் வரும் மோனிஷா

மீண்டும் வரும் மோனிஷா

Subscribe to Oneindia Tamil

அகத்தியன் இயக்கும் வேடந்தாங்கல் படத்தில் பலர் மீண்டு(ம்) கோடம்பாக்கத்துக்கு வருகின்றனர்.

சினிமாவில் காணாமல் போன ரஞ்சிதா, அழகியில் நடித்த மோனிஷா ஆகியோர் மீண்டும் நடிக்க, சில காலம் படங்களை இயக்கப்போய்விட்ட தங்கர்பச்சான் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கேமராமேனாக திரும்பி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிக்க இருந்த தேவயானி கழன்று கொண்டுவிட்டார். இதனால் அவரது ரோலில் தான் ரஞ்சிதா நடிக்கிறார். முழுக்கவும் டிவிபக்கமே ஒதுங்கிவிட்ட தேவயானி அப்போ, இப்போ ஏதாவது ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.

தனக்கு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை வாங்கித் தந்த காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தினின் வேடந்தாங்கல்படத்தில் தேவயானி நடிக்க இருந்தார். என்ன நடந்ததோ அந்த ரோலுக்கு ரஞ்சிதா வந்துவிட்டார்.

இளைச்சாலும் புலி புல்லைத் திங்காது எனற கொள்கை கொண்ட ரஞ்சிதா இதுவரை கதாநாயகர்களுக்கு அக்கா, அம்மா, அண்ணி ரோலில்எல்லாம் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

வேடந்தாங்கல் படத்தில் அவர் ஹீரோயின் இல்லை. ஆனாலும் முக்கியமான ரோலாம். இதனால் ஒப்புக் கொண்டாராம்.

கலைவாணி மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி தானே இந்தப் படத்தை தயாரிக்கிறார் அகத்தியன். அவரதுமுந்தைய படமான ராமகிருஷ்ணா சரியாகப் போகாததில் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் டக்கென அடுத்த படத்துக்குதயாராகிவிட்டார்.

புன்னகை பூவே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நந்தா தான் இதில் கதாநாயகன் (இவர் மதிமுக பொருளாளர் மு.கண்ணப்பனின்பேரன் என்பது உங்களுக்குத் தெரியுமோ. கண்ணப்பன் மூலம் கலைப்புலி தாணுவைப் பிடித்து ஹீரோவானார்).

இவருக்கு ஜோடியாக அழகியில் இளம் நந்திதா தாஸாக நடித்த மோனிஷா நடிக்கிறார். மலையாளப் பெண்ணான இவர் தெலுங்கில் ஏககிளாமர் காட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது உமா என்று பெயரை மாற்றிக் கொண்டு இந்தப் படத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு இசை தேவா. கேமராவை கவனிக்கப் போவது பரபரப்பு ஸ்பெஷலிஸ்டான தங்கர்பச்சான்.

இரண்டாவது ஹீரோயினாக ராமகிருஷ்ணாவின் செகண்ட் ஹீரோயின் வேடம் செய்த வாணி நடிக்கிறார். இவர் அகத்தியனுக்கு ரொம்பநெருங்கிவிட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரே கிசுகிசுப்பு.

இந்தப் படத்தில் நடிக்காவிட்டாலும் கூட, படங்களுக்கு தமிழ் பெயர்களைத் தான் சூட்ட வேண்டும் என்று தேவயானி மிக தைரியமாக ஒருகருத்தை வெளியிட்டிருக்கிறார் தெரியுமா?

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம்கேஷுவலாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவதில் தவறே இல்லை. தமிழ்ப படங்களுக்குதமிழில்தானே பெயர் வைக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பா நடக்குற போராட்டங்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று அவரை பிராண்டியபோது அது குறித்து நான் என்ன சொல்லஎன்று பட்டும் படாமலும் கூறி விட்டு எஸ்கேப் ஆனார் தேவயானி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil