»   »  நிறம் மாறிய ரோஜாக்கள்!

நிறம் மாறிய ரோஜாக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென் மாவட்ட காவல்துறையை முந்தானை முடிச்சில் வைத்திருந்த போலீஸ் அழகி ஜெயலட்சுமியின் கதையைகோலிவுட்காரர்கள் படமாக்கப் போகிறார்கள். ஒன்றல்ல.., இரண்டு படங்கள்.

ஏதாவது சூடான நிகழ்கால டாபிக் கிடைத்தால் அதை படமாக்கி விடுவது அவ்வப்போது நடக்கிறது. ஆட்டோசங்கரை வைத்து நூறாவது நாள் வந்தது. சந்தனக் கடத்தல் வீரப்பனை வைத்து கேப்டன் பிரபாகரன் உருவானது.

இப்படி இப்போது மதுரைக்கு இந்தாண்ட மற்றும் "அந்தாண்ட" உள்ள மாவட்டங்களை கலக்கி வரும் ஜெகஜாலஜெயலட்சுமியின் கதையும் படமாகப் போகிறது.

இந்தக் கதையின் நாயகியாக மும்தாஜை நடிக்க வைக்கவும் திட்டம் வைத்துள்ளனர். படத்திற்கு பெயர் கிரிமினல்லேடி.

இப்போது வீராச்சாமி படத்தில் டி.ராஜேந்தருக்கு ஜோடியாக 15 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்துநடித்துக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். அப்படியே கிரிமினல் லேடியாகவும் வேஷம் கட்டப் போகிறாராம்.

இதற்கிடையே ஜெயலட்சுமியின் கதையையே நிறம் மாறிய ரோஜாக்கள் என்ற பெயரில் படமாக்க நீலாவதிராஜன் என்ற தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகத்தின் தலைவரானகே.ராஜனின் மனைவியாவார்.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய நீலாவதி,

பெண்களின் அவமானச் சின்னமாக ஜெயலட்சுமி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். காவல்துறை, அரசுத்துறைகளில் எத்தனை கருப்பு ஆடுகள் உள்ளன என்பதையும் இந்த விவகாரம் வெளிக் கொண்டு வந்துவிட்டது.இந்த சமுதாய சீரழிவை சுட்டிக் காட்டுவதோடு, இன்னொரு ஜெயலட்சுமி உருவாகாமல் தடுப்பதே நாங்கள்எடுக்கப் போகும் படத்தின் நோக்கம்.

அதே நேரத்தில் ஜெயலட்சுமியை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரது கதையை பின்புலமாக வைத்து படம்எடுக்கப் போகிறோம்.

அதே போல காவல்துறையால் விபச்சாரியாக சித்தரிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் படிப்படியாகமுன்னேறி வருகிறார் என்ற கிளைக் கதையும் படத்தில் இருக்கும். இவரும் நிஜ பாத்திரம் தான். ஆனால், யார்என்பதை இப்போது வெளியிட முடியாது.

ஒரு பெண் எப்படி வாழக் கூடாது என்பதை ஒரு கேரக்டரும், எப்படி வாழ வேண்டும் என்பதை இன்னொருகேரக்டரும் பேசும் என்றார்.

இந்தப் படத்துக்கான நடிகை, நடிகர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அடுத்த இரு வாரங்களில் நடிகர்கள்தேர்வை முடித்து சூட்டிங்கை 35 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

யார் இந்த ஜெயலட்சுமி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil