»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"கட்டிப்புடி...", "மலே மலே..." ரேஞ்சுக்கு மும்தாஜின் அடுத்த கலக்கல் பாடல் தேவா இசையில் தயாராகிவிட்டது.

"கட்டிப்புடி கட்டிப்புடி..." என்று விஜய்யைக் கண்டபடி கட்டிப் பிடித்த பிறகுதான் மும்தாஜுக்கு கோலிவுட்டில் மவுசுஏறியது. அந்த ஒரு பாட்டுத்தான் அவரது திரையுலக வாழ்க்கைக்கு புது வழி காட்டியது.

அன்று முதல் தேவாவின் இசைக்கு ஆடுவது என்றால் மும்தாஜ் சந்தோஷமாகி விடுவார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் கலக்கல் பாடலான "மலே மலே..." பாட்டின் மூலம் மும்தாஜ் உச்சாணிக்கொம்புக்கே சென்று விட்டார். இப்போது மறுபடியும் அது போன்ற ஒரு பாடல் அவரைத் தேடி வந்துள்ளது.

மும்தாஜ் சொந்தமாகத் தயாரிக்கும் "தத்தித் தாவுது மனசு" படத்தில் வாலியின் அசத்தலான பாட்டுக்கு அட்டகாசமாகஇசையமைத்துள்ளாராம் தேவா.

"கட்டிப்புடி...", "மலே மலே..." இரண்டையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவுக்கு கலக்கலாக வந்திருக்கிறதாம்இந்தப் புதிய பாடல். பாடலைக் கேட்ட மும்தாஜ் குஷியாகி விட்டாராம்.

"தேவான்னா தேவாதான்" என்று தேவாவை பாராட்டித் தீர்த்து விட்டாராம். இந்தப் பாடலின் மூலம் இன்னும் 10படங்கள் என்னைத் தேடி ஓடி வரும் என்று தெம்பாக வளைய வருகிறார் மும்தாஜ்.

கொசுறு செய்தி: "கட்டிப்புடி...", "மலே மலே..." இரண்டு பாடல்களிலும் வேறொரு பாடகியுடன் குரல் சேர்த்திருந்தஅனுராதா ஸ்ரீராம், இந்தப் புதிய பாடலை தனித்தே பாடியிருக்கிறாராம். வாலியின் வரிகளிலும் வாலிபம் அப்படித்துள்ளி விளையாடுகிறதாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil