»   »  '75' கேட்கும் நயனதாரா

'75' கேட்கும் நயனதாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nayantara

பில்லாவில் சீரும், சிறப்புமாக கிளாமரில் கலக்கிய நயனதாரா இப்போது தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தி விட்டார். 75 லட்சம் சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது. இதை ஒரு தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டு விஜய்யுடன் நயனதாராவை ஜோடியாக்கி படம் எடுக்கவுள்ளாராம்.

சாமி மூலம் அறிமுகமாகி, வேகமாக பிக்கப் ஆன நயனதாரா, சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பிறகு சூப்பர் ஹிட் நாயகியானார்.

அதன் பின்னர் வேகமாகப் போய்க் கொண்டிருந்த அவரது திரையுலக வாழக்கைக்கு ஸ்பீட் பிரேக்கர் போல சிம்பு வந்து சேர்ந்தார்.

சிம்புவுடன் ஏற்பட்ட காதல், பின்னர் அதில் ஏற்பட்ட மோதல், கடைசியாக பிரிந்து போனது என பல சிக்கல்களில் அவதிப்பட்ட நயனதாரா அதன் பின்னர் பெரிய அளவில் தமிழில் நடிக்காமல் போய் விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த பில்லா சமீபத்தில் ரிலீஸாகியது. இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கிளாமராக நடித்துள்ளார் நயனதாரா. அவரது இந்த கிளாமரைப் பார்த்து பலரும் தங்களது படத்திலும் இதுபோல கிளாமர் காட்டுமாறு அன்போடு கோரி வருகிறார்களாம்.

இந்த நிலையில் தனது சம்பளத்தை நயனதாரா திடீரென ஏற்றி விட்டாராம். தமிழில்தான் நயனதாரா மிக நிதானமாக போய்க் கொண்டிருக்கிறார். ஆனால் தெலுங்கில் அவருக்கு கை நிறையப் படங்கள் உள்ளன. அங்கு நல்ல டிமாண்டிலும் உள்ளார்.

எனவே நயனதாராவை வைத்துப் படம் எடுக்க அங்கு பலரும் ஆர்வமாக உள்ளனர். ஹீரோயினாக நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு குத்துப் பாட்டிலாவது தலை காட்டி விட்டுப் போங்க என்று அணத்துகிறார்களாம்.

இப்போது தமிழில் தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நயனதாரா நடித்துக் கொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு விஜய் நடிக்கும் புதிய படத்திற்காக நயனதாரா ஒப்பந்தமானார். படத்தின் பிற விவரங்கள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாம். இப்படத்தில் நயனதாராவுக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் தரப்படவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. எல்லாம் பில்லாவால் ஏற்பட்ட டிமாண்ட் என்கிறார்கள்.

அதேபோல பிரபுவும் அஜீத்தை வைத்து தயாரிக்கப் போகும் புதிய படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க நயனதாராவை அணுகியுள்ளாராம்.

இப்படி தமிழ், தெலுங்கில் படு கிராக்கியாக மாறியுள்ள நயனதாரா மறந்தும் கூட தாய் மொழியான மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லையாம்.

ஏன் இந்த பாரபட்சம் அம்மே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil