»   »  கெட்டவன் என் கதை- நயனதாரா புலம்பல்

கெட்டவன் என் கதை- நயனதாரா புலம்பல்

Subscribe to Oneindia Tamil

சிம்பு நடித்து வரும் கெட்டவன் படத்தின் கதை என்னைப் பிரதிபலிக்கும் கதை என்று நயனதாரா புலம்புகிறாராம். படத்தைத் தடுத்து நிறுத்தவும் யோசித்து வருகிறாராம்.

வல்லவன் படத்தின் ஆரம்பத்தில் சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் உருவான காதல், படம் முடிந்ததும் முறிந்து போய் விட்டது. சிம்புவின் சில சில்மிஷ செயல்களால் கடுப்பான நயனதாரா காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம் என்று போய் விட்டார்.

அப்செட் ஆன சிம்பு சில காலம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு தேற்றிக் கொண்டு ஊர் திரும்பினார். வந்ததும், எங்கிருந்தாலும் வாழ்க என்று நயனதாராவை வாழ்த்தினார்.

இந்த நிலையில், கெட்டவன் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. இந்தக் கதை, ஆண்களை ஏமாற்றிய பெண்களின் கதை என்று கூறியிருக்கிறார். என் கதையும் கூட என்றும் சொல்லியுள்ளார் சிம்பு.

இதனால் நயனதாரா கடுப்பாகியுள்ளாராம். தனுஷுடன் நடித்து வரும் யாரடி நீ மோகினி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுதொடர்பாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் என்னைப் பற்றித்தான் சித்தரிக்கவுள்ளார் சிம்பு. இதை விட மாட்டேன், நிச்சயம் படத்தைக்குத் தடை வாங்குவேன், கோர்ட்டுக்குப் போவேன் என்று கூறி வருகிறாராம் நயனதாரா.

படத்துக்கு எந்த வகையில் தடை விதிக்கலாம் என்பது குறித்து வக்கீல்கள் சிலருடனும் கலந்து பேசியுள்ளாராம் நயனதாரா.

கெட்டவன் என்ன ஆவான் என்பது தெரியவில்லை, ஆனால் என்னவோ நடக்கப் போகிறது என்பது மட்டும் நல்லாத் தெரியுது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil