»   »  வாயால சொன்னா போதுமா… அக்ரிமெண்ட் கேட்கும் இயக்குநர்!

வாயால சொன்னா போதுமா… அக்ரிமெண்ட் கேட்கும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ பெண் வேஷம் போட்டு நடிக்கும் இரண்டெழுத்து படத்தை மிக பிரம்மாண்டமாக பில்டப் கொடுத்துவருகிறார்கள். அதில் ஒன்றுதான் அந்த படம் சிறப்பாக வந்திருப்பதால் அதன் இயக்குநரான புதுமுகத்துக்கு தங்கள் கம்பெனியிலேயே அடுத்த வாய்ப்பு தரப்போகிறோம் என்பது.

இதன் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறதாம். இப்படி ஒரு செய்தி கசிந்தால் படம் நன்றாக வந்திருக்கிறது என்பதும் வெளியே வரும். படத்தின் வியாபாரம் நன்றாக நடக்கும். அதனாலேயே இப்படி ஒரு செய்தியை கிளப்பி விடுகிறார்கள்.

படத்தின் இயக்குநரோ, 'அக்ரிமெண்ட் ஒண்ணும் போடலை. வாய் வார்த்தையா வெளில சொல்லி அடுத்த படத்துக்கு யாரும் வராதபடி செஞ்சுட்டாங்க... படம் ரிலீஸாகி அது ஓடினாத் தான் வாய்ப்பு தருவாங்க... அதுக்கு எதுக்கு இப்பவே அறிவிக்கணும்?' என்று புலம்புகிறார்.

இதெல்லாம் நியாயமா புரொட்யூசர் சார்?

English summary
TV hero's big budget movie producer announced his next with the same director, but not gave any commitment in written.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X