Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பட வாய்ப்புகளே வரல.. மீண்டும் சொந்த ஊருக்கே திரும்ப முடிவெடுத்த பவுடர் டப்பா.. என்ன ஆச்சு?
சென்னை: பக்கத்து நாட்டில் இருந்து பக்காவா செட்டில் ஆகலாம் என பலே பிளான் உடன் வந்த அந்த நடிகையை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி விட்டனராம்.
ரியாலிட்டி ஷோவில் நடித்த நடிகை உடனடியாக தனது அழகைக் காட்டி பட வாய்ப்புகளை அள்ளினார்.
ஆனால், நடிக்கவே கொஞ்சம் கூட தெரியவில்லை என்கிற நிலையில், நடிகைக்கு புதிய போட்டிகளும் வந்த நிலையில், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார்.
முதல்ல விஜய்.. அப்புறமா அஜித்.. மாஸ்டர் டைரக்டருக்கு வந்த ஆசையை பாருங்க!

ஊரை விட்டு ஊரு வந்து
தனது சொந்த ஊரில் இருந்து பெரிய பயணம் செய்து அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார் அந்த பவுடர் டப்பா. ஷோவில் பிரபலம் அடைவதற்காக அந்த நடிகரை காதலிப்பது போல காதலித்து வந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் அந்த காதல் கதைக்கும் தனியாக ஸ்க்ரிப்ட் வைத்து எண்ட் கார்டு போட்டு விட்டனர். ஆனால், நடிகர் அந்த நடிகையை சின்சியராக காதலித்தார் என்றும் நடிகை தான் சினிமா சான்ஸுக்காக கழட்டி விட்டார் என்றும் பேச்சுக்கள் கிளம்பின.

குவிந்த வாய்ப்பு
கொஞ்சம் கலரா அழகா இருக்கிறார் என்றதும் எப்படி ரியாலிட்டி ஷோ வாய்ப்பு கிடைத்ததோ அதே போல சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் நடித்த படங்கள் வெளியானதும் நடிப்பு சுட்டுப் போட்டால் கூட வராது என்பதை அறிந்து கொண்ட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இனிமேல் நீங்க வேணா என ஓரங்கட்ட ஆரம்பித்து விட்டனர். பிளான் போட்டு வந்த எல்லாமே பாழாய் போனதே என ஃபீல் செய்து வருகிறாராம் அந்த பவுடர் டப்பா.

ஏகப்பட்ட போட்டி
அடுத்தடுத்த சீசன் போட்டியாளர்களே போட்டியாக வந்த நிலையில், புதிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் போனது. மேலும், இந்த நடிகையை விட இளையவர்கள் சான்ஸ் கிடைத்தால் போதும் என குறைந்த சம்பளத்துக்கு ஒன்றுக்கு இரண்டு படங்கள் கூட நடிக்க தயார் என வந்து விட்ட நிலையில், யாருமே தற்போது வாய்ப்பு கொடுக்கவில்லையாம்.

சொந்த ஊருக்கே
இந்நிலையில், நடிகை தனது சொந்த ஊருக்கே திரும்ப முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் பரபரப்பாக கிளம்பி உள்ளன. போட்டோஷூட் எடுத்துப் போட்டு வாய்ப்புகளை தேடலாம் என்று பார்த்தால், படு கிளாமராக போஸ் கொடுக்க ஏகப்பட்ட நடிகைகள் அங்கேயும் போட்டியில் இருப்பதால், இந்த ஊரே வேண்டாம் என ஒரேயடியாக பெட்டி படுக்கைகளை தூக்கிட்டு கிளம்ப போகிறாராம்.

சின்னத்திரை பக்கம்
வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்றாலும், அந்த தொலைக்காட்சியே ஏதாவது ஒரு சீரியலில் வாய்ப்பு கொடுத்து நடிகையை இங்கேயே வைத்துக் கொள்ளும் முயற்சியையும் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், நடிகை அந்த ஆபரை ஏற்றுக் கொள்ளப் போகிறாரா இல்லையா? என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்கின்றனர்.
-
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
-
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? தனுஷிற்கு கிடைத்த மற்றுமொரு கௌரவம்!
-
ஒன்லி ஃபார் அடல்ட்ஸ்.. நெட்பிளிக்ஸின் டாப் 5 லேட்டஸ்ட் ஹாட் வெப்சீரிஸ்.. எல்லாமே எக்ஸ்ட்ரா தான்!