டாப் நடிகர் மீது கடும் கோபத்தில் நம்பர் நடிகை.. எல்லாத்துக்கும் அந்த பிரச்சனை தான் காரணமா?

By Staff

சென்னை: காதல் கணவருக்காக கஷ்டப்பட்டு மிகப்பெரிய டீலிங்கை முடித்துக் கொடுத்த நம்பர் நடிகைக்கு கடைசியில் டாப் நடிகர் செய்த செயல் கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். இதன்காரணமாக நடிகர் மீது நடிகை செம கோபத்தில் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டாப் நடிகரின் படத்தில் இருந்து அன்பான இயக்குநர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது நூறு சதவீதம் உண்மை என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இயக்குநரும் அந்த அளவுக்கு கிளம்பிய ட்ரோல்களுக்கு எந்தவொரு பதிலடியும் கொடுக்காமல் மன வேதனையில் அப்படியே ஆஃப் ஆகி கிடக்கிறாராம்.

பெரிய அசிங்கம்

பெரிய அசிங்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் என சொல்லிக் கொண்டிருந்த அந்த அன்பான இயக்குநருக்கு இதை விட ஒரு பெரிய அசிங்கம் இருக்கவே முடியாது என சினிமா வட்டாரத்தில் இயக்குநரை கடுமையாக பலரும் விளாசி வருகின்றனராம். கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் சொந்த வாழ்க்கையில் அதிக அக்கறை செலுத்தியதே இந்த விவகாரத்துக்கு காரணம் என்கின்றனர்.

மனைவி வாங்கித் தந்த வாய்ப்பு

மனைவி வாங்கித் தந்த வாய்ப்பு

ஒவ்வொரு முறையும் அந்த இயக்குநருக்கு பெரிய நடிகர்கள் படங்களின் வாய்ப்பை பெற்றுத் தருவதே அவர் மனைவி தானாம். அதிலும், இந்த முறை தயாரிப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் டீலிங் பேசி இந்த பெரிய வாய்ப்பை மனைவி வாங்கித் தந்த நிலையிலும், அதனை இயக்குநரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையாம்.

டாப் நடிகர் தான் காரணம்

டாப் நடிகர் தான் காரணம்

டாப் நடிகரின் படத்தை கணவர் இயக்கும் பட்சத்தில் ஹீரோயினாக மாறி மீண்டும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கலாம் என்கிற கனவுகளுடன் இருந்த நடிகைக்கு ஆரம்பத்திலேயே ஆப்பு அடித்து விட்டாராம். அந்த டாப் நடிகர். நீங்க என்ன வேணா படம் பண்ணுங்க, ஆனால், உங்க பொண்டாட்டி மட்டும் ஹீரோயினாக வேண்டாம் என கறார் ஆக சொல்லிட்டாராம்.

அப்படியொரு சம்பவம்

அப்படியொரு சம்பவம்

அதற்கு முக்கிய காரணமே கடைசியாக நம்பர் நடிகையுடன் டாப் நடிகர் இணைந்து நடித்த படம் வெற்றிப் பெற்றாலும் மீண்டும் அந்த கூட்டணி வேண்டாம் என நடிகர் தீவிரம் காட்டி வருவதற்கு நடிகை பண்ண ஓவர் பந்தா தான் காரணம் என்கின்றனர். டாப் நடிகரையே மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டது நடிகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதன் காரணமாகத்தான் இந்த படத்தில் அவர் வேண்டவே வேண்டாம் என சொல்லி விட்டாராம்.

கோபத்தில் நடிகை

கோபத்தில் நடிகை

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தனது கணவருக்காக ஒரு பெரிய வாய்ப்பை நடிகை அமைத்து வைத்திருந்த நிலையில், இப்படி பழைய பகையை மனதில் வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டாரே அந்த நடிகர் என நம்பர் நடிகை கடும் கோபத்தில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எல்லாமே வீணாப் போச்சு

எல்லாமே வீணாப் போச்சு

நடிகரின் படத்தை நம்பி நடிகை போட்டு வைத்திருந்த பலே திட்டங்கள் எல்லாம் வீணாக போன நிலையில், கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம் நம்பர் நடிகை. சமீப காலமாக அவர் நடித்து வரும் எந்தவொரு படமும் ஓடாத நிலையில், அந்த காப்பி இயக்குநரின் படம் ரிலீஸாகும் வரை கொஞ்சம் அமைதியாக இருப்போம் என வெயிட் பண்ணி வருகிறாராம். அதற்கு பிறகு மீண்டும் தனது கேமை ஸ்டார்ட் பண்ணலாம் என நடிகை இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X