எனக்கு நடிப்பு முக்கியம் இல்லை...அந்த விஷயத்திற்கு தயாரான நம்பர் நடிகை

By Staff

சென்னை : அந்த நம்பர் நடிகை பல ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில் தான் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஏற்கனவே குடும்ப சைடில் பல பிரச்சனைகள், எதிர்ப்புக்கள். இதை மீறி தனது கடந்த கால கசப்பான அனுபவங்களுக்கு முடிவு கட்ட விடாபிடியாக இருந்து திருமணத்தை முடித்து விட்டார் நம்பர் நடிகை.

நடிகையின் காதலரும், நடிகை மீது கொண்ட தீராத காதல் காரணமாக வீட்டை எதிர்த்து, சண்டை போட்டு பிடிவாதமாக திருமணம் செய்துள்ளார். முதலில் இவர்களின் காதலை ஏற்ற இரு குடும்ப பெரியவர்களும், திருமணம் என்றதும் தயங்கினார்களாம். இரு தரப்பிலும் தங்களின் வெயிட்டை காட்ட எக்கச்சக்கமாக கன்டிஷன்கள் போட்டுள்ளனர்.

எங்கு போற போக்கை பார்த்தால் இவர்கள் போட்டியில் நம்மை பிரித்து விடுவார்களோ என்று பயந்து தான், தங்களின் திருமண வேலைகள் அனைத்தையும் நம்பர் நடிகையும், காதலருமே தனியாக பார்த்துக் கொண்டனராம். அதோடு தங்கள் குடும்பத்தினரிடம், "உங்களுக்கு இஷ்டம் இருந்தால் ஒரு கெஸ்ட் போல திருமணத்தில் வந்து நின்று விட்டு போங்கள். இல்லை என்றால் வர வேண்டாம். ஆனால் இந்த திருமணம் நிச்சயம் நடந்தே தீரும்" என உறுதியாக சொல்லி விட்டார்களாம்.

மீடியாக்களுக்கு வைத்த கோரிக்கை

மீடியாக்களுக்கு வைத்த கோரிக்கை

இந்த பிரச்சனை காரணமாக தான் காதலர் தரப்பில் நெருங்கிய சொந்தங்களைக் கூட கூப்பிடவில்லையாம். நம்பர் நடிகை தரப்பில் அவரின் அம்மாவே வரவில்லை. இதற்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளித்துள்ளனர். மீடியாக்கள் போன்றவர்களும் பெரிதாக குடையாமல், அம்மா வரவில்லை என்ற அளவிலேயே முடித்துக் கொண்டுள்ளனர். இது கூட நடிகை தரப்பில் மீடியாக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தானாம்.

தோண்டி எடுத்து பேசுகிறார்களே

தோண்டி எடுத்து பேசுகிறார்களே

இத்தனை குழப்பங்களை தாண்டி பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்கள். ஆனால் சோஷியல் மீடியாவில் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து சொன்ன அதே அளவிற்கு சங்கடமான பல பர்சனல் விஷயங்களையும் தோண்டி எடுத்து விமர்சித்தனர். அதிலும் நடிகையின் குடும்ப வாழ்க்கை பிளான் பற்றி மிக மோசமாகவே பேசப்பட்டுள்ளது.

அடப்பாவிங்களா இப்படியா கிளப்பி விடுறது

அடப்பாவிங்களா இப்படியா கிளப்பி விடுறது

வெறும் பெயருக்கும் மட்டும் தான் நடிகை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு திருமணம் வாழ்க்கையில் விருப்பமில்லை. கடைசி வரை லிவ்விங் டூகெதரிலேயே வாழ்க்கையை கடத்தலாம் என நினைத்திருக்கிறார். தனது நோய்க்கு ட்ரீட்மென்ட் பார்க்க பிரேக் எடுக்க தான் இந்த திருமணம், பிரேக் எல்லாம். அதிலும் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வயதாகி விட்டது. வாடகை தாய் மூலமாக தான் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறார். நம்பர் ஒன் இடத்தை இழக்க நம்பர் நடிகை தயாராக இல்லை என்று கூட கூறினார்கள்.

கல்யாண பூரிப்பில் நடிகை

கல்யாண பூரிப்பில் நடிகை

நோய் காரணமாக தான் நடிகையின் தோற்றத்தில் வயதானது தெரிய துவங்கியது என்றார்கள். ஆனால் திருமணம் முடிந்ததுமே நடிகையின் அழகு முன்பை விட பல மடங்கு கூடியதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். கல்யாணம் முடிந்த பூரிப்பில் தான் நடிகையின் தோற்றத்தில் பொலிவு ஏற்பட்டதாக கூட சிலர் கூறினார்கள்.

அந்த நாட்டிற்கு போக இதுதான் காரணமா

அந்த நாட்டிற்கு போக இதுதான் காரணமா

நோய் இருப்பது உண்மை தான் என்றாலும், அது மற்றவர்கள் சொல்வதை போல் பெரிய வியாதியோ, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத வியாதியோ இல்லையாம். சாதாரண தோல் வியாதி தானாம். அதனால் தான் தங்களின் ஃபேவரைட்டாக பல நாடுகள் இருக்கையில், சிகிச்சைக்கு பெயர் போன அந்த நாட்டிற்கு ஜோடியாக போய் உள்ளார்களாம்.

அதிரடி முடிவெடுத்த நடிகை

அதிரடி முடிவெடுத்த நடிகை

தற்போது பிரச்சனை என்னவென்றால், குடும்ப வாழ்க்கை பற்றி வந்த மோசான விமர்சனங்களால் நடிகை ரொம்பவே மனமுடைந்து போய் இருந்தாராம். இதற்கு முடிவு கட்டுவதற்காகவும், விமர்சித்தவர்களுக்கு பதிலடிக்க கொடுப்பதற்காகவும் தனது திருமண பிளானின் பல மாற்றங்களை செய்துள்ளாராம் நடிகை. அந்த முக்கிய முடிவுகளில் ஒன்று தான் குழந்தை விவகாரமாம்.

அந்த விஷயத்திற்கு தயாராகிறார்

அந்த விஷயத்திற்கு தயாராகிறார்

தனக்கு நடிப்பு முக்கியமில்லை. குடும்ப வாழ்க்கை தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். அதனால் தற்போது கைவசம் இருக்கும் படங்களை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த படங்களை முடித்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். அதுவும் விமர்சகர்கள் சொன்னபடி வாடகை தாய் மூலம் கிடையாதாம். இயற்கையான முறையில் தானே குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகி விட்டாராம் நம்பர் நடிகை. இதனால் விரைவில் குட் நியூஸ் வர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X