நம்பர் நடிகையின் கல்யாணத்துல இத்தனை வில்லங்கமா...இதையும் பிசினஸ் ஆக்கிட்டாரே
சென்னை : நம்பர் நடிகை தனது கல்யாணத்தை சிம்பிளா, ரகசியமா நடித்த போகிறார் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமில்லையாம். தனது கல்யாணத்தில் பக்காவாக பிசினஸ் பேசி, பெரிய தொகையை லாபமாக பார்ப்பதற்கு தான் சில பல பிளான்களை போட்டுள்ளாராம்.
நீண்ட கால காதலரை ஒரு வழியாக கல்யாணம் பண்ண போகிறார் என அறிவித்து விட்டார்கள். கல்யாண தேதி, இடம் எல்லாம் கூட சொன்னார்கள் ஆனால் பிறகு வெளியான கல்யாண பத்திரிக்கையால் கல்யாணம் நடக்கும் இடத்தை மட்டும் மாற்றி விட்டார்கள். இதற்கு கட்டுப்பாடு, ஆட்களை நிறைய கூட்டிச் செல்ல முடியாது என்றெல்லாம் பல காரணங்களை சொல்லி சமாளித்தார்கள்.

நடிகை கல்யாணத்திற்கு நோ
ஏற்கனவே காதல் டைரக்டரின் குடும்பத்தில் பலரின் எதிர்ப்பை மீறி தான் இந்த கல்யாணம் நடக்க போகிறது. இதில் இவர்கள் கல்யாணம் செய்வதற்காக தேர்வு செய்த கோயில் நிர்வாகம், நம்பர் நடிகையின் மதத்தை காரணம் காட்டி, கல்யாணம் நடத்த அனுமதி வழங்க மறுத்து விட்டது. பல பெரிய தலைகளை பிடித்து முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. பின்னாடி தங்களுக்கு பிரச்சனையாகி விடும் என கோயில் நிர்வாகம் பிடிவாதமாக நோ சொல்லி விட்டது.

கல்யாணத்தில் பிசினஸ் பேசிய நடிகை
இதற்கிடையில் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று, நம்பர் நடிகையின் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பிசினஸ் பேசி உள்ளது. முதலில் கோயிலில் நடத்துவதாக இருந்த போதே, அந்த நிறுவனத்திடம் அதிக தொகைக்கு பேரம் பேசி வந்துள்ளார் நடிகை. ஆனால் கோயில் என்பதால் ஓரளவுக்கு மேல் வீடியோ எடுக்க முடியாதே என ஓடிடி நிர்வாகமும் குழப்பத்தில் இருந்தது. ஆனால் கோயிலில் கல்யாணத்தை நடத்த அனுமதி கிடைக்காததால், முக்கியமான சுற்றுலா தளத்தில் உள்ள ரிசார்ட்டிற்கு கல்யாணத்தை மாற்றி விட்டனர்.

பெரிய லாபம் பார்த்துட்டாரே
கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டுள்ள விவிஐபி.,க்கள் லிஸ்ட்டில் பல டாப் நடிகர்களின் பெயர்கள் உள்ளது. இதனால் இந்த வீடியோ பார்க்க நிச்சயம் அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதை கணக்கு போட்டு, அந்த ஓடிடி நிறுவனத்தை மீண்டும் அழைத்து பெரிய தொகைக்கு பேரம் பேசி உள்ளார் நம்பர் நடிகை. அந்த நிறுவனமும், டாப் நடிகர்கள் வருவதால் எப்படியும் வியாபாரம் ஆகி விடும் என்பதை யோசித்து நடிகை சொன்ன பெரிய தொகைக்கு பிசினஸ் பேசி முடித்து விட்டது.

பக்கா பிளானா இருக்கே
மதத்தை காரணம் காட்டி கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதை யாரும் பெரிய பிரச்சனையாக பேசி விடக் கூடாது என்பதற்காக, அதை மறைக்க வேறு காரணத்தை சொல்லி கல்யாணத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அதை வைத்தும் வியாபாரம் பார்க்க பக்காவாக பிளான் போட்டு கல்யாணத்திலும் பெரிய தொகையை லாபமாக பார்த்து விட்டார் நடிகை.


Click it and Unblock the Notifications











