மும்பையில் எவ்ளோ முட்டினாலும் ஒருத்தரும் கண்டுக்கல.. செகண்ட் சேனல் என கலாய் வேற.. பாவம் பேபிம்மா!
சென்னை: ஒரு காலத்தில் பேபி நடிகை இருந்த ரேஞ்சுக்கு தற்போது அவரது நிலை தலைகீழாக மாறிவிட்டதை பார்த்து பலரும் பரிதாபப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடல்நலனில் அக்கறை செலுத்தாமல் டாப் ஹீரோயினாக வர வேண்டும் என ஏகப்பட்ட ஏடாகூட வேலைகளை பார்த்து வந்த நிலையில், அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டது.
அதன் காரணமாகவே பேபி நடிகையை காதலித்து திருமணம் செய்தவரே கை கழுவி விட்டார் என்றும் தற்போது மும்பையில் தொடர்ந்து இன்னொரு காதலுக்காக நடிகை ஏங்கி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

நடிகைக்கு வாக்குறுதி கொடுத்த நபர் இப்போதைக்கு வேறு ஒரு சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், நடிகைக்கு அவராலும் எந்தவொரு உதவியையும் செய்யவே முடியவில்லை என்றும் ஆள் பார்க்கவே ரொம்ப டல்லாக தொடர்ந்து சில பெரிய நிறுவனங்கள் கதவை தட்டி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
கேப்பில் புகுந்த யங் நடிகைகள்: ஹீரோயின்களை பொறுத்தவரை 5 ஆண்டு திட்டம் போலத்தான். சில நடிகைகள் தான் 20 ஆண்டுகளை எல்லாம் தாண்டி டாப் நடிகையாக வலம் வர முடியும். கிடைக்கிற கேப்பில் புதுப்புது நடிகைகளை ஹீரோக்கள் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரையில் 30 பிளஸ் நடிகையுடன் நடிப்பது கூட போர் ஆன விஷயம் தான் என்றும் 18 முதல் 25 வயது நடிகைகளுக்கே இங்கே டிமாண்ட் அதிகம் என்கிற நிலை உள்ளதால் பேபி நடிகையை தற்போது யாருமே சீண்டவில்லை என்கின்றனர்.
மில்க் பியூட்டி போல: மில்க் பியூட்டி நடிகை இப்போ கவர்ச்சியில் களமிறங்கியதை போல முன்னாடியே இதற்கு மேல் இப்படி இறங்கி நடித்தால் தான் காலத்தை ஓட்ட முடியும் என கணித்து நடிகை களமிறங்கினாலும் அவரது உடல்நிலை குறைவு காரணமாக குத்தாட்டம் கூட போட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக கூறுகின்றனர். தெரியாத மருத்துவர்களின் தேவையில்லாத ஆலோசனைகளை எல்லாம் கண் மூடித்தனமாக கேட்டதன் விளைவு தான் நடிகை இப்படி இண்டஸ்ட்ரியை விட்டே காணாமல் போக காரணம் என்கின்றனர்.
செகண்ட் சேனல்: மும்பையில் சில முன்னணி நிறுவனங்கள் கதவை தொடர்ந்து தட்டி வரும் நடிகையை நீங்க அந்த நபரின் செகண்ட் சேனல் என பேச்சுக்கள் வருகிறதே உண்மையா? என சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் ஓபனாகவே கேட்டது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. கூடிய சீக்கிரமே மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டுவேன் என தொடர்ந்து நடிகை போராடி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











