»   »  புறக்கணிக்கப்படும் அமீர்!

புறக்கணிக்கப்படும் அமீர்!

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படத்தின் புதிய டிரெய்லர் மற்றும் விளம்பரங்களில் இயக்குநர் அமீர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவரது பெயரை முடிந்த அளவுக்கு சின்னதாக்கி விட்டார்களாம்.

சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தையும், ஜீவாவை வைத்து ராம் என்ற மாபெரும் படத்தையும் இயக்கியவர் அமீர். இரு படங்களும் மிகப் பெரும் வரவேற்பை, வெற்றியைப் பெற்ற படங்கள்.

இதையடுத்து தனது டீம்ஒர்க் என்டர்டய்ன்மன்ட் நிறுவனம் மூலம் பருத்தி வீரனை தயாரித்து இயக்கினார் அமீர். படம் முடிந்ததும் விற்பனை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

படம் நன்றாக வந்திருந்ததாலும், தயாரிப்புச் செலவு கூடி விட்டதாலும், படத்துக்கு அதிக விலை வைத்தார் அமீர். ஆனால் அவ்வளவு பெரிய தொகையைத் தர விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை.

இதையடுத்து ஹீரோ கார்த்தியின் அண்ணனான நடிகர் சூர்யாவை அணுகினார் அமீர். படத்தை மொத்தமாக ஒரு ரேட் போட்டுக் கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு கோரினார். ஆனால் அதை சூர்யா ஏற்க முன்வரவில்லை.

ஆனால் சிவக்குமார் படத்தைப் பார்த்து விட்டு, நன்றாக வந்திருப்பதால், தனது உறவினரான ஞானவேல்ராஜா மூலம் பருத்தி வீரனை வாங்க முடிவு செய்தார். ஆனால் குறைந்த ரேட் ெகாடுப்பதாக ஞானவேல் ராஜா கூறியதால் தயங்கினார் அமீர்.

இதைதத் தொடர்ந்து அரசியல் புகுந்ததாகவும், முக்கியப் புள்ளி ஒருவரை வைத்து பருத்தி வீரனை மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து விட்டார்கள் என சர்ச்சை கிளம்பியது. இந்த கட்டாய விற்பனையால் அமீருக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாம்.

ஒரு வழியாக சிக்கல் தீர்ந்து படம் வெளிவந்தது. இப்போது வசூலிலும், வரவேற்பிலும் சாதனை படைத்து வருகிறது. படம் சிறப்பாக ஓடியும், அமீருக்கும், ஞானவேல் ராஜா தரப்புக்கும் இடையிலான பூசல் ஓய்ந்தபாடில்லையாம்.

படம் குறித்து புதிதாக வெளியாகிக் கொண்டிருக்கும் விளம்பரங்களில் அமீரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாம். மிகச் சிறிய அளவில்தான் அவர் பெயரை காண முடிகிறது. அதாவது பி.ஆர்.ஓ.க்கள் பெயரை போடுவார்கள் இல்லையா, அந்த இடத்தில்தான் அமீர் பெயரும் வந்து போகிறது.

இதுகுறித்து அமீரிடம் கேட்டபோது, இதுகுறித்து பேசவே விருப்பம் இல்லை சார். என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். யாருடைய படைப்பு இது என்பதும் அவர்களுக்குத் ெதரியும். யார் இந்த வெற்றிக்குக் காரணம் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

அது போதும் எனக்கு. பெயரை இருட்டடிப்பு செய்தது குறித்து எனது கவனத்திற்கும் வந்தது. ஆனால் இதற்கு நான்ப் பதில் சொல்ல விரும்பவில்லை.உண்மையில் பருத்தி வீரன் நினைவிலிருந்து நான் வெளியே வர விரும்புகிறேன். எனது இப்போதைய முழுக் கவனமும் எனது அடுத்த படமான கண்ணபிரான் மீதுதான் உள்ளது. அப்படத்தை எப்படி வெற்றிப் படமாக்குவது என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

எனக்குப் பணம் குறித்துக் கவலை இல்லை. அப்படி இருந்தால், ராம் படத்துக்குப் பிறகு பல பெரிய நடிகர்கள் என்னை அணுகியபோதே அவர்களை வைத்துப் படம் எடுத்திருப்பேன். புதிய நடிகரைத் தேடிப் போயிருக்க மாட்டேன்.

பருத்தி வீரன் மூலம் மனிதர்களின் சுயரூபம், நிறம் குறித்துத் தெரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வருத்தம் ததும்பும் குரலில் அதே நேரம், தன்னம்பிக்கையில் சற்றும் தொய்வில்லாமல் கூறினார் அமீர்.

இயக்குநர்கள் பாவமும் பொல்லாததப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil