»   »  பாதி சம்பளம் கூட தரல...புலம்பும் வம்பு நடிகர்... கொதிக்கும் தயாரிப்பாளர்‍!

பாதி சம்பளம் கூட தரல...புலம்பும் வம்பு நடிகர்... கொதிக்கும் தயாரிப்பாளர்‍!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் ரிலீஸாகி வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றப்படும் படத்தின் ஹீரோவுக்கு பேசியதில் பாதி சம்பளம் கூட கொடுக்கலையாம்.

வம்பு நடிகரின் சம்பளம் 7 கோடி. இந்த படத்தில் அவரை நடிக்க அழைத்தபோது அந்த சம்பளம் தருவதாக சொல்லி ஒரு கோடியை அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

பின்னர் கடைசி ஷெட்யூலின் போது 50 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். மீதி ஐந்தரை கோடிக்கு அல்வா கொடுத்து விட்டார்களாம். கேட்டால் உங்களாலதான் பட்ஜெட் அதிகமாகிடுச்சு. ரிட்டர்ன் வந்ததும் தந்தர்றோம். செகண்ட் பார்ட் இருக்குல்ல... என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது மொத்த கலெக்‌ஷனே அவ்வளவு தேறாது. செகண்ட் பார்ட் ஐடியாவும் ட்ராப் ஆகும் சூழல் உருவாகி விட்டது. ஐந்தரை கோடி போச்சே... என்று புலம்புகிறாராம் வம்பு.

ஆனால் தயாரிப்பாளர் பக்கம் கேட்டாலோ நடிகரைப் பற்றி கதை கதையாய் சொல்கிறார்கள். தனியாக பிரஸ் மீட் வைத்து நடிகரை வெளுத்து வாங்கப் போவதாகக் கூறுகிறது தயாரிப்பு.

English summary
Biggest flop of the year movie producer keep pending Rs 5 and half crores salary for the hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil