மாஸ் நடிகர் பயங்கர ஹேப்பியாம்.. கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்த நிலையில், பார்ட்டி வைத்து கொண்டாட்டம்?

By Staff

சென்னை: மாஸ் நடிகருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏகப்பட்ட சிக்கலை உருவாக்க குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதை அறிந்த மாஸ் நடிகர் கவலை எல்லாம் படாமல் ரொம்பவே ஹேப்பியாகி இருப்பதாகவும் அதற்காக சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து பார்ட்டி வைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சினிமாவில் எப்படி டாப் இடத்துக்கு வரவேண்டும் என்கிற வித்தையை கற்றுக் கொண்டு பல முன்னணி நடிகர்களுடனும் தன்னை விட அழகானவர்கள் மற்றும் திறமையான நடிகர்களுடனும் போட்டிப் போட்டு வளரும் வித்தையை அறிந்த நடிகர் தற்போது அரசியல் பாடத்தையும் ஒவ்வொரு நாளும் அதே வேகத்தில் கற்று வருகிறாராம்.

Political Actor seems very happy and recently conduct a party with his close friends

ஆரம்பத்தில் நமக்கு எதுக்குப்பா வம்பு என ஒதுங்கியிருந்த நடிகர் களத்தில் இறங்கும் போது கூட இந்தளவுக்கு கான்ஃபிடன்ட்டாக இல்லை என்றும் ஆனால், தற்போது எதிர்ப்புகள் அதிகரிக்கவே நாம சரியான ரூட்டில் தான் பயணிக்கிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டதாக கூறுகின்றனர்.

மிகப்பெரிய அதிர்வலை: மாஸ் நடிகருக்கு நாளுக்கு நாள் தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகள் கிளம்பி வருகிறது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ட்ரோல் அல்லது பாராட்டுக்களால் நிறைந்து வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக அவர் கவனிக்கப்பட்டு வருகிறார். அவர் மீது தொடர்ந்து மீடியா வெளிச்சம் விழுந்து வருவதே அவருக்கான பப்ளிசிட்டி தான் என்றும் அதை பக்காவாக புரிந்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் மற்ற கட்சிகளும் அவருக்காக அவர்களுக்கு தெரியாமலே வேலை பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ரொம்ப ஹேப்பி: எதை நினைத்து களத்தில் இறங்கினோமோ யாரை எதிர்க்கிறோமோ அவர்கள் தன்னை கண்டுக்கொள்ளாமல் விட்டால் தான் கவலைப்பட வேண்டும் என நினைத்த நடிகருக்கு தற்ஓது டபுள் ஹேப்பி என்கின்றனர். தன்னை எதிர்க்க சில கட்சிகளுக்கு பெரிய பேரம் பேசப்பட்டு வருவதையும் அறிந்துக் கொண்ட மாஸ் நடிகர் பயங்கர ஹேப்பியாகி உள்ளார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

நண்பர்களுடன் பார்ட்டி: புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கி ரொம்பவே அதில் மூழ்கியிருந்த நடிகர் தற்போது கொஞ்சம் ரிலாக்ஸ் இடையே பண்ணலாம் என தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து பார்ட்டி வைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், பார்ட்டிக்கு வந்த நண்பர்கள் ரொம்பவே எச்சரிக்கையாக இருடான்னு சில அட்வைஸும் கொடுத்து விட்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர். அடுத்த ஆண்டு சினிமா மற்றும் அரசியல் என மாஸ் நடிகர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதை பார்க்க பலரும் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X