அந்த நடிகரின் இமேஜை காலி பண்ண பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அரசியல் பிரபலம்

By Staff

சென்னை : அரசியல் பிரபலம் கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அந்த நடிகரின் பெரிய படம் தீராத சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாக ஏற்கனவே அரசல் புரசலாக தகவல் வெளியானது. அந்த பஞ்சாயத்து இன்னும் தீராததால் தான் அந்த நடிகரின் படம் சுனாமியில் சிக்கியதை போல் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறதாம்.

சமீபத்தில் அந்த நடிகர், அரசியல் முக்கிய புள்ளி ஒருவரை சந்தித்த பிறகு தான் இந்த பிரச்சனை எல்லாம் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லையாம். இது பல மாதங்களாக புகைந்து கொண்டிருந்த பழைய விஷயம் தானாம். இந்த படமே அரசியல் பிரபலத்தின் பிளான் தானாம்.

இதுக்கு தான் அந்த பிளானா

இதுக்கு தான் அந்த பிளானா

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அந்த நடிகரை வசமாக சிக்க வைத்திருக்கிறார்களாம். அந்த நடிகரின் இமேஜை காலி பண்ண தான் இத்தனை பிளானும் போடப்பட்டு, அதன் உச்சகட்ட நகர்வு தான் தற்போது வெளியில் வந்திருக்கும் விவகாரமாம். இதோடு உங்க சகவாசமே வேணாம். உங்க வம்புக்கே வர மாட்டேன் என அந்த நடிகரை அலற விடதான் இந்த பிளான் போடப்பட்டதாம்.

பேச்சால் சிக்கிய நடிகர்

பேச்சால் சிக்கிய நடிகர்

பெரிய நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டி வருவது காலம் காலமாக சினிமாவில் நடப்பது தான். என்றாலும் அந்த நடிகர் ஏற்கனவே பட விழா ஒன்றில் பேசிய போது, அரசியல் பிரபலத்தை ஜாடையாக தாக்குவதை போல் பேசியதை அரசியல் பிரபலத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அந்த நடிகரின் அரசியல் வருகைக்கு தான் இந்த பேச்சு என நினைத்து பலரும் சாதாரணமாக விட்டு விட்டனர். அதற்கு பிறகு அரசியலுக்கு வர அந்த நடிகர் காட்டிய ஆர்வம், அவரின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றை பார்த்த அரசியல் பிரபலம் மிரண்டு போய் விட்டாராம்.

அரசியல் ஒரு மேட்டரே இல்லை

அரசியல் ஒரு மேட்டரே இல்லை

அப்போதே அந்த நடிகருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சினிமாவில் தனக்கு இருக்கும் இமேஜிற்கு அரசியல் ஒரு மேட்டரே இல்லை என கெத்தாக பேசி விட்டு வந்துள்ளார் அந்த நடிகர். இதனால் அவரின் அரசியல் நகர்வுகளை தடை செய்யவும், அவரின் இமேஜை காலி செய்யவும் தான் அந்த பெரிய படத்தில் அவரை பிடித்து புக் செய்து, படத்தில் நடிக்க ஓகே சொல்ல வைத்துள்ளனர். இந்த பிளான் தெரியாமல் அந்த நடிகரும் பெரிய நிறுவனத்தின் பெரிய படம் என ஓகே சொல்லி விட்டாராம்.

இடைஞ்சல் தந்த பிரபலம்

இடைஞ்சல் தந்த பிரபலம்

ஆனால் அசராமல் அந்த நடிகர் படத்தில் நடித்தபடியே அரசியல் வேலைகளை கவனித்து வந்துள்ளார். அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக அரசியல் முக்கிய புள்ளியையும் பார்த்துள்ளார். இதனால் கோபம் உச்சத்திற்கு போன அரசியல் பிரபலம், பல காரணங்களை சொல்லி பட விழாக்களை கூட நடத்த விடவில்லையாம். தற்போது போகிற போக்கை பார்த்தால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வார்களா என்று கூட தெரியவில்லை.

அடங்க மறுக்கும் நடிகர்

அடங்க மறுக்கும் நடிகர்

சிறிய நடிகர்களின் படங்களுக்கு கூட பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரிய நடிகரின் பெரிய படத்தை விளம்பரமே செய்யாமல் வைத்துள்ளனர். இதனால் பல ரசிகர்கள் இந்த படம் பற்றியே மறக்கும் நிலை வந்து விட்டதாம். இத்தனை நடந்தும் இன்னும் அரசியல் பிரபலம் மற்றும் அந்த நடிகருக்கு இடையேயான பஞ்சாயத்து தீர்ந்த பாடில்லையாம். அரசியல் பிரபலம் நினைத்தபடி அடி பணிய அந்த நடிகர் மறுத்து வருவதால் அந்த படத்திற்கு எந்த அளவிற்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ, அந்த அளவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.

செம பிளானா இருக்கே

செம பிளானா இருக்கே

அதில் ஒரு பிளான் உள்ளதாம். இந்த படம் வெளியே வந்தால் தான் நடிகரால் அடுத்த படத்தில் நடிக்க முடியுமாம். அப்படி சொன்ன படி நடிக்க முடியவில்லை என்றால் அதுவும் நடிகருக்கு புதிய தலைவலியாக இருக்கும். கிடுக்கிப்பிடி போட்டு, அடி பணிவதை தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் அந்த நடிகரை லாக் பண்ணி வைத்துள்ளார்களாம். இதனால் என்ன செய்து இதிலிருந்து தப்பிக்க போகிறோம் என தெரியாமல் வாயமடைந்து போய், அரசியல் பிரபலம் நினைத்தது போலவே இமேஜ் மொத்தமாக காலியாகி விடுமோ என நொந்து போய் இருக்கிறாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X