»   »  தம்பி மாதவனும்.. சிங்களத்து பூஜாவும்

தம்பி மாதவனும்.. சிங்களத்து பூஜாவும்

Subscribe to Oneindia Tamil

மாதவனும் பூஜாவும் மீண்டும் ஜோடி சேரப் போகிறார்கள்.

மாதவன் நடித்த ஜேஜே படத்தில் அமோகா தான் ஹீரோயின் என்றாலும் செகண்ட் ஹீரோயினாக வந்த பூஜா தான் எல்லோரையும்கவர்ந்தார். இப்போது இந்த லவ்லி ஜோடி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தின் பெயர் தம்பி.

சிடி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இந்தப் படத்தை இயக்கப் போவது சீமான். இதில் பூஜாவுக்கு பரத நாட்டியம் ஆடும் பெண்வேடமாம்.

ஆனால், வெஸ்ட்ர்ன் டான்ஸ் தெரிந்த பூஜாவுக்கு பரதம் சுத்தமாக வராது. படத்தில் நிறையவே பரத நாட்டிய மூவ்மெண்ட்ஸ் காட்டவேண்டிய கட்டாயம்.

பூஜாவின் திணறலைக் கண்ட இயக்குனர் சீமான், டான்ஸ் மாஸ்டர் சொல்றபடி பண்ணினா போதும், ரொம்ப சிரமப்பட வேண்டாம் என்றுபூஜாவுக்காக மனமிறங்கினாராம்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட பூஜா உடனடியாக பரதம் கற்க ஆரம்பித்துவிட்டாராம். நடிகை சுமித்ராவின் மகள் உமாவின் உதவியுடன்ஒரு நல்ல மாஸ்டரிடம் சேர்ந்து கிளாசிகல் நடனம் கற்று வருகிறார் பூஜா.

நடிக்க வந்தோமா, பேருக்கு கொஞ்சம் டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு ஆட்டம் போட்டோமா, பணம் சம்பாதித்தோமா, ஊருக்குப்போனோமா என்று தனது சக நடிகைகள் கோலிவுட்டை நாறடித்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்துக்காக மெனக்கெட்டு பரதம் கற்கும்பூஜவை பாராட்டித் தீர்க்கிறார் இயக்குனர் சீமான்.

இப்படி ஒரு பக்கம் சின்சியராக நடிக்க முயன்றாலும், பூாவுக்கு வந்த ஒரு ஹீரோயின் வாய்ப்பு அவரை விட்டு நழுவிச் சென்றிருக்கிறது.

டிஸ்சும் என்ற தலைப்பில் ஒரு மெகா பட்ஜெட் படத்துக்கு இவரை புக் செய்த நிறுவனம், திடீரென இவரைக் கழற்றிவிட்டுவிட்டு காதல்படத்தின் குறும்பு நாயகி சந்தியாவை புக் செய்யப் போய்விட்டது. இதில் பூஜாவுக்கு ரொம்பவே வருத்தமாம்.

தொழிலில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் பூஜாவுக்கு இன்னொரு வருத்தமாக விஷயமும் நடந்திருக்கிறது. நடிகர் அஜீத்தின் மனைவிஷாலினியின் தம்பி ரிச்சர்ட் உடனான பூஜாவின் காதல் சமீபத்தில் முறிந்துவிட்டதாம்.

இந்தக் காதல் முறிவுக்கு முன் ரிச்சர்ட்டின் உதவியோடு மலையாளத்தில் பிரிதிவிராஜுடன் ஹீரோயினாக நடிக்க ஒரு வாய்ப்பு இவருக்குக்கிடைத்தது. அதில் தொடர்ந்து நடித்தபடி தான் இருக்கிறார் பூஜா. அப்படியே மலையாளத்தில் புதிய வாய்ப்புக்களையும் தேடி வருகிறார்.

இதற்கிடையே பூஜா குறித்து கோலிவுட்டில் ஒரு பேச்சு. அதாவது இவர் சிங்களப் பெண் என்கிறார்கள். தன்னை கர்நாடகப் பெண் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார் பூஜா. ஆனால், ரகசியமாய் சிலருடன் சிங்களம் பேசுகிறார். அடிக்கடி கொழும்பு பக்கமும் போய்வந்தபடி இருக்கிறார். இதனால் இவர் ஒரு சிங்களத்து சின்னக் குயிலு என்கிறார்கள்.

இது குறித்து பூஜா தரப்பில் விசாரித்தால், அப்பா கன்னடம், அம்மா சிங்களம் என்று பதில் கிடைத்தது.

Read more about: actress, cinema, groom, kollywood, meena, ramya, sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil