மரண பயத்தில் தமாஸ் நடிகர்.. இந்த படம் அடிவாங்கினால் அடுத்த படத்துக்கும் ஆப்பு.. பில்டப்புக்கு ரெடி?

By Staff

சென்னை: தமாஸ் நடிகரின் கடைசி படம் பல டாப் நடிகர்களை டவுன் நடிகர்களாக மாற்றிய நிலையில், விரைவில் வெளியாகப் போகும் படத்தின் ரிசல்ட் என்ன ஆகப் போகிறதோ என்கிற பயம் அதிகமாகவே நடிகருக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர். அதற்கு முக்கிய காரணமே இந்த படம் தோல்வியைத் தழுவும் என்பது மட்டுமின்றி அடுத்த படத்தின் பிசினஸும் அடிவாங்குமே என்பது தான் என்கின்றனர்.

அவுட்டேட்டட் இயக்குநர்கள் அவ்வப்போது ஏதாவது உருட்டு உருட்டி நல்ல வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர்களை பேசியே கவுத்து படம் பண்ணிவிடுவார்கள். ஆனால், படம் வெளியான பின்னர், அது அரத பழைய கதை என்றும் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் ஓடாமலும் போய்விடும்.

Popular Actor fears about his next movie result so he try to start heavy buildup soon

வசூல் கணக்கை மட்டும் பில்டப் செய்து ஊரை ஏமாற்றிக் கொண்டு வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அந்த நிலைமை தற்போது மாஸ் நடிகருக்கும் ஏற்படும் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

எதுவுமே கைகொடுக்கல: அந்த ஒல்லி இசையமைப்பாளருக்கும் அவருடைய போட்டியாளருக்கும் ஊரே சண்டை என பேசிக் கொண்டிருந்த நிலையில், இருவரையும் வைத்து ஒரு சமையல் சமைத்து கொடுத்தால் பயங்கர ஹிட் அடிக்கும் என நினைத்து உடம்பை வருத்தி ஹெவியா டான்ஸ் எல்லாம் போட்ட தமாஸ் நடிகருக்கு அந்த பாடல் ரசிகர்களை கவரவில்லை என்பதை தெரிந்ததும் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம். ஒல்லி இசையமைப்பாளர் ஏகப்பட்ட படத்துக்கு வேலை பார்த்து வரும் நிலையில், ஏஐ வைத்தே பாடல்களை உருவாக்கி வருவதால் தான் இந்த பிரச்சனை என்கின்றனர். 2வது பாடலும் கேட்கும் படி இல்லை என்றும் எல்லாமே ஓல்டாக இருக்க கதையும் அப்படித்தான் இருக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

மரண பயத்தில் தமாஸ் நடிகர்: வெற்றியும் தோல்வியும் உச்ச நடிகருக்கே மாறி மாறி வரும் நிலையில், வளர்ந்து வரும் நிலையில், தமாஸ் நடிகருக்கு மீண்டும் ஒரு தோல்விப் படமாக அடுத்த படம் அமைந்து விடுமோ என்கிற பயம் உள்ளுக்குள் இருக்கிறதாம். இயக்குநரின் கதை, திரைக்கதையை தாண்டி தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி அவர் நடித்துள்ள நிலையில், கன்டென்ட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஃபிளாப் தான் ஆகும் என்கின்றனர். அதைவிட அடுத்த படத்தின் பிசினஸும் ஒட்டுமொத்தமாக சரிவை சந்திக்கும் என்பது தான் மனவேதனையை அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர்.

பில்டப்பை ஏத்து: இந்நிலையில், எப்படியாவது இந்த படத்தையும் ரசிகர்கள் தலையில் முதலிலேயே கட்டிவிட்டால் தான் அடுத்த படத்தையும் காப்பாற்ற முடியும் என்பதை நன்கு உணர்ந்துக் கொண்ட தமாஸ் நடிகர் நாளை நடைபெற உள்ள பெரிய நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பில்டப்புகளை உச்ச நடிகரை போலவே அவிழ்த்து விட தயாராகி விட்டார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X