கடைசியில நிலைமை படுமோசமா ஆகிடுச்சே.. தமாஸ் நடிகருக்கு தயாரிப்பாளரே கிடைக்கலையா? என்னங்க சொல்றீங்க!

By Staff

சென்னை: ஃபீல்டு அவுட்டான இயக்குநரை என்னோட ஸ்டார்டம் வச்சு எப்படி கம்பேக் கொடுக்க வைக்கிறேன் பாருங்க என பலரும் அட்வைஸ் பண்ணியும் தலை கீழாகத்தான் குதிப்பேன் என குதித்த தமாஸ் நடிகருக்கு தற்போது பெரிய இடியே அவரது சினிமா வாழ்க்கையில் விழுந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தையே பதற வைத்துள்ளன.

கஷ்டப்பட்டு படம் எடுப்பவர்களுக்கே உதவிக்கரம் நீட்டி நான் இருக்கேன் வாங்க பார்த்துக்கலாம் என சொல்லக் கூடிய நடிகர் நல்ல வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில், தேவையில்லாமல் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார் என்றும் புதிய தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Popular Actor feels bad after some producers aovids his next big movie

எல்லாவற்றுக்கும் காரணம் நடிகர் கேட்கும் பெரிய சம்பளம் தான் முக்கிய பிரச்சனையே என காத்துவாக்குல செய்திகள் பரவி வருகின்றன.

பேராசை பெருநஷ்டம்: தமாஸ் நடிகராக இருந்து மக்கள் மனங்களில் கொஞ்சம் இடம் பிடித்த நிலையில், வித்தியாசமான படங்களை பண்ணி எண்டர்டெயின் பண்ணாமல் அதே பழைய ஸ்டார் நடிகர்களின் ரூட்டை பிடிக்கிறேன் என்றும் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங்கே நான் தான் என்றும் ஓவர் பில்டப் செய்து வந்த நடிகருக்கு தம்பி கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுப்பா என சில தயாரிப்பாளர்கள் ஒதுக்கி விட்டதும் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.

பாவம் பார்த்தது வீணாப்போச்சே: ஒழுங்கா வண்டி ஓடிக்கொண்டிருந்த நிலையில், சினிமாவில் வளர்ந்து வருபவர்களுக்கு உச்ச நடிகர் போல அழைத்து சீன் போட்டுக் கொண்டிருந்த தமாஸ் நடிகரு அந்த இயக்குநருக்கு பாவம் பார்த்த நிலையில், தற்போது தனக்கான ஆப்பை தானே தேடி வைத்துக் கொண்டார் என்கின்றனர்.

தயாரிப்பாளரே கிடைக்கலையா: தமாஸ் நடிகரை புக் செய்ய ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், சமீபத்திய படத்தின் ரிசல்ட் காரணமாக பெரிய பட்ஜெட், பெரிய சம்பளம் என்றால் இந்த பக்கம் தலை வைத்தே படுக்காதப்பா என தயாரிப்பாளர்கள் கையெடுத்துக் கும்பிடும் நிலைக்கு சென்று விட்டார்கள் என்றும் தயாரிப்பாளர்களே கிடைக்காத நிலைக்கு நடிகர் தள்ளப்பட்டுள்ளார் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.

அடுத்த படம் தான் காப்பாத்தணும்: இண்டஸ்ட்ரியில் அடிவாங்கியிருக்கும் தனது ஒட்டுமொத்த இமேஜையும் அடுத்த படம் தான் காப்பாத்தணும் என்பதை புரிந்துக் கொண்ட நடிகர் சரியான ரிலீஸ் தேதியை திட்டமிட்டு வெளியிட தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X