மக்கள் மத்தியில் பெருசா கோபமே இல்லை.. மாஸ் நடிகரின் மனசு உடைஞ்சு போக காரணமே அதுதானாம்?
சென்னை: தொடர்ந்து திட்டமிட்டே தன்னை காலி செய்ய ஒரே ஒரு கட்சி மட்டுமே வேலை பார்த்து வருகிறது என்றும் மக்கள் மத்தியில் பெரிதாக தன் மீது எந்த கோபமும் இல்லாத அளவுக்கு அவர்கள் தன்னை நம்புகின்றனர் என்பதை புரிந்துக் கொண்ட மாஸ் நடிகர் மேலும், மனசு உடைஞ்சு போய்விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதுதான் சரியான நேரம் என இதுவரை மாஸ் நடிகர் எதிர்த்து வந்தவர்கள் எல்லாம் அவரை கைக்குள் போட்டுக் கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், அவருடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகளே நடிகருக்கு அந்த ரூட்டில் செல்லவே ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றனர்.

ஆனால், தொடர்ந்து தன் மீது மிகப்பெரிய தவறு இருந்தும் மக்கள் நம்புகின்றனர் என்பதை புரிந்துக் கொண்ட நடிகர், தன்னிடம் உள்ள குறைகளையும் தன்னைச் சுற்றியுள்ள கோளாறுகளையும் சரி செய்துவிட்டு மக்களுக்காக கடைசி வரை நின்று போராட போவதாக முடிவெடுத்து இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
மன வேதனையில் மாஸ் நடிகர்: தனக்கு கிடைத்த உற்சாக வரவேற்பை நினைத்து செம சந்தோஷத்தில் இருந்த நடிகருக்கு எதிர்பாராதவிதமாக இப்படியொரு மோசமான சம்பவம் நடைபெறும் என்பதை கொஞ்சம் கூட அவரோ அவருடன் இருந்தவர்களோ யூகிக்காமல் விட்டது தான் ஒட்டுமொத்தமாக அவரை நிலை குலைய வைத்துவிட்டதாக கூறுகின்றனர். அந்த மன வேதனையில் இருந்து மீளமுடியாமல் தவித்து வந்த நடிகர் மீண்டும் மனவேதனையில் ஆழ்ந்துள்ளதாகவும் அதற்கு காரணம் சமீபத்தில், மக்கள் இன்னமும் தன்னை நம்புவதை நினைத்து தான் என்கின்றனர்.
சூழ்ச்சி வலை: தனக்கு எதிராக சிலர் திட்டம் போட்டு தன்னையும் தனது புகழையும் காலி செய்து விட்டதை தெளிவாக புரிந்துக் கொண்ட நடிகர், தன்னுடன் இருந்த சிலரது சூழ்ச்சி வலையையும் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருவதாக கூறுகின்றனர். கூடவே இருந்து குழி பறித்த நபர் மீது பயங்கர கடுப்பில் நடிகர் உள்ளார் என்றும் அவரை சும்மா விடமாட்டார் என்றும் கூறுகின்றனர்.
லாக் ஆகமாட்டார்: இதுதான் சமயம் என சிலர் நடிகரை அடிமையாக்கி லாக் செய்துவிடலாம் என முயற்சித்து வரும் நிலையில், அவருடன் இருப்பவர்களும் இப்படி சென்றால் தான் தப்பிக்க முடியும் என ஐடியா கொடுத்து வர, அதெல்லாம் தேவையே இல்லை என்றும் தோற்றுப் போனால் கூட தோற்றுப் போவேன், ஆனால், லாக் ஆக மாட்டேன் என்பதில் நடிகர் தெளிவாக இருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











