கடைசி வரைக்கும் நான் தமாஸ் நடிகர் தானா?.. போட்ட பில்டப் எல்லாம் வீணாப்போச்சே.. புலம்பும் ஹீரோ?
சென்னை: தமாஸ் நடிகரில் இருந்து எப்படியாவது மாஸ் நடிகராகி விடவேண்டும் என முடிவு செய்து மாஸ் நடிகர் எந்த எந்த இயக்குநர் படங்களில் பணியாற்றினாரோ அவரை எல்லாம் பிடித்து படம் பண்ணிக் கொண்டிருக்கிறார் தமாஸ் நடிகர்.
ஆனால், ஹீரோவாக இவருக்கு பெரிய ஸ்டார்டம் எல்லாம் இன்னும் வரவில்லை என்றும் படத்தின் கதை மக்களை கவர்ந்தால் மட்டுமே வெற்றி பெறும் நாயகனாக ஆவார் என்றும் மற்ற நடிகர்கள் வரிசையில் தான் மக்கள் இவரையும் வைத்துள்ளனர் என்பதை தற்போது தெளிவாகவே உணர்ந்துக் கொண்டுள்ளார் என்கின்றனர்.

இனிமேல், குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்பதை நடிகர் புரிந்துக் கொண்டார் என்று கூறுகின்றனர்.
பில்டப் எல்லாம் வீணாகிப்போச்சே: நடிகருக்கு எதிராக நெகட்டிவிட்டிகள் கிளம்பக் கூடாது என ஏகப்பட்ட பேரை கரெக்ட் செய்து போட்ட பில்டப் எல்லாம் வீணாகிப்போச்சே என தமாஸ் நடிகர் பயங்கர டென்ஷனில் இருக்கிறாராம். சில நாட்களுக்கு தன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என அடுத்த படத்தை உருவாக்கி வரும் இயக்குநரிடமும் சொல்லிவிட்டு அமைதியாக சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அந்த நடிகருக்கு சந்தோஷம்: தமாஸ் நடிகர் இந்த முறையும் மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளி விட்டால் நமக்கு ரொம்ப சிக்கலாகி விடுமே என நினைத்துக் கொண்டு இருந்த அந்த பிரபல நடிகருக்கும் ரொம்பவே சந்தோஷம் என்கின்றனர். அவரது ஐடி விங் தான் இந்த படம் இப்படியொரு ரிசல்ட்டை அடைய காரணமாக இருந்தது என்று நினைத்து பார்ட்டி ஒன்றையும் நடத்தியுள்ளார் என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
சின்ன கல்லு பெத்த லாபம்: இதற்கு மேல் அகல கால் வைக்கக் கூடாது என்றும் சின்ன கல்லு பெத்த லாபம் பாணியை கடைபிடித்தால் கண்டிப்பாக தயாரிப்பாளர்களை திருப்திப்படுத்தலாம் என்கிற முடிவுக்கும் நடிகர் வந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். சம்பள விஷயத்திலும் மற்ற முன்னணி ஹீரோக்கள் போல எல்லாம் கறார் காட்டாமல் இருக்கும் நிலையில், சீக்கிரமே பிக்கப் ஆகி விடுவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











