நான் சாமி படம் நடிச்சா கூட வாங்க ஆளில்லையே.. புலம்பும் பிரைட் நடிகர்.. எல்லாமே ஓரளவுக்குத்தான் ப்ரோ!
சென்னை: புராண காலத்து படங்களை மற்ற மொழிகளில் எடுத்தால் பான் இந்தியா வெற்றியாக்கி கொண்டாடுகிறார்கள் என நினைத்து நாமும் அப்படியொரு படத்தை எடுக்கலாம் என மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரைட் நடிகர் நடித்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதே நடிகரை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அதைவிட கொடுமையான விஷயமாக சாமி படங்கள் தான் இப்போ செமையா ஓடுது பாஸ் என நடிகரை பிரைன் வாஷ் பண்ணி படம் எடுத்த அந்த டைரக்டர் இப்போ படம் சரியாக வியாபாரம் ஆகாமல் ரிலீஸ் பண்ண முடியாமல் சிக்கித் தவித்து வருவதால் சைலண்ட் ஆகிவிட்டாராம்.

எப்படியாவது ஒரு நல்ல வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் நடிகர் அடுத்ததாக ஒல்லி நடிகரின் அதர் ஸ்டேட் ரூட்டையும் கையில் எடுத்து இருப்பதாக கூறுகின்றனர்.
மிஸ்ஸான முதலிடம்: ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு முதலிடத்திலேயே வந்து அமர்ந்தவர் தான் பிரைட் நடிகர். ஆனால், தற்போது பாக்ஸ் ஆபீஸில் அவருக்கு தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், அவரது முதலிடம் மட்டுமின்றி பல இடங்கள் காலியாகி பின்னோக்கி சென்றுவிட்டார் என்று பல இளம் நடிகர்கள் அவரை முந்திக் கொண்டு மேலே ஏறிவிட்டதாகவும் கூறுகின்றனர். இது அவரையும் அவரது குடும்பத்தையும் ரொம்பவே பாதித்துள்ளது என்கின்றனர்.
மத்தவன் கத்துனா ரசிக்கிறாங்க: நாம கத்துனா காது வலிக்குது, தலை வலிக்குதுன்னு மைக்கை கடிச்சி தின்னானுங்க, இப்போ மத்தவன்லாம் காட்டு கத்து கத்தும் போது, அய்யோ சாமி வந்து ஆடுது பாருங்கன்னு கையெடுத்துக் கும்பிடுறானுங்களே என நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.
சாமி படம் எடுத்தும்: அதே ரூட்டை பிடித்துக் கொண்டு சென்று சாமி கதைகளை மையமாக வைத்தே தொடர்ந்து டெமி காட் ஆகிவிடலாம் என பிரைட் நடிகர் பிளான் போட்டாலும் யாரும் அவரது படத்தை பார்க்க ஆர்வம் காட்டாமல் இருந்து வருவது மனதளவில் நடிகரை ரொம்பவே வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறுகின்றனர். அதிலும், அந்த சாமி படம் இன்னமும் வியாபாரம் ஆகாமல் இருப்பது நடிகரை அப்செட் ஆக்கியுள்ளதாம். இதற்கு மேல், மக்களை கவரக்கூடிய படங்களை கொடுக்கும் இயக்குநர்கள் பக்கமே போக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











