இதுக்குத்தான் தலையால அடிச்சிக்கிட்டேன்.. இப்போ சந்தோஷமா?.. நடிகரை விளாசிய மனைவி!
சென்னை: தேவையில்லாமல் சிலர் தூண்டி விடுவதால் தெரியாத வேலையை பார்க்க வேண்டாம் என ஏற்கனவே மனைவி மற்றும் குடும்பத்தினர் எச்சரித்தும் யார் பேச்சையும் கேட்காமல் தான் செய்வது தான் சரி என நினைத்து ஓவர் ஆட்டம் போட்ட நடிகர் தற்போது உடைந்து இருப்பதாகவும் இப்போ சந்தோஷமா என மனைவி அவரை விளாசி எடுத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தெரிந்த தொழிலை திறம்பட செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு பேராசையுடன் தெரியாத தொழிலை கையிலெடுத்த நிலையில், அதில், மிகப்பெரிய இழப்பை சந்தித்து தற்போது தலையில் துண்டு போட்டுக் கொண்டு வீட்டில் ஓரமாக உட்கார்ந்து நடிகர் ரொம்பவே ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம்.

இதுபோன்ற சிக்கல்களும் மோசமான சூழ்நிலைகளும் வந்தால் உங்களால் சமாளிக்க முடியாது என்றும் உடனிருப்பவர்களின் தவறான ஆலோசனைகள் காரணமாக திசை மாற வேண்டாம் என படிச்சு படிச்சு சொன்னேனே என நடிகரை விட்டு விளாசியுள்ளாராம் அவரது மனைவி என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகருக்கு ஆசை: ஒரே வண்டியை ஓட்டிக் கொண்டு ஒரே கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து இருந்து நடிகருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் போரடித்த நிலையில், எப்படியாவது நாம் நம்முடைய கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து இன்னொரு புதிய விஷயத்தில் கால் வைத்து அதிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்கிற பெருங் கனவுடன் புதிய தொழிலை கையிலெடுத்தார். ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட அபசகுணங்களும், பிரச்னைகளும் சிறிய அளவில் வந்துக் கொண்டிருந்த நிலையில், மொத்தமாக சோலியை முடிக்கும் சிக்கலில் தற்போது மாட்டித் தவிக்கிறார் நடிகர்.
சேர்க்கை சரியில்லை: சரியான ஆட்களை உடன் வைத்திருக்காமல் ஒன்றுக்கு உதவாதவர்களை கூட வைத்துக் கொண்டு அவர்கள் உசுப்பேற்ற கம்முன்னு இருக்காமல் நடிகர் போட்ட ஆட்டம் அவருக்கே தற்போது ஆப்படித்து விட்டது. எந்தவொரு முன் அனுபவம் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்தவர்களை கூட பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் வெறும் துதி பாடுபவர்களை வைத்துக் கொண்டதால் வந்த வினையை தற்போது நன்றாக அறுவடை செய்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.
டோஸ் விட்ட மனைவி: இதுக்குத்தான் அந்த புது பிசினஸ் வேண்டாம் என்று தலையால் அடித்துக் கொண்டேன், இப்போ இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கீங்களே என மனைவி நடிகருக்கு செம டோஸ் விட்டுள்ளார் என்றும் இதுக்கு மேல ஒரு தவறு நடந்தால் கூட மொத்தமாக முடித்து விடுவார்கள் உஷாராக இருங்க, இது நமக்கு வேண்டாம் என்றும் அட்வைஸ் கொடுத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆனால், நடிகர் அதையெல்லாம் காதிலேயே வாங்கியதாக தெரியவில்லை என்று பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











