அந்த நடிகைக்கும் அதே பிரச்சனை இருக்காம்.. அதனால் தான் கல்யாணமே ஆகலயாம்.. கிளப்பி விட்ட பிரபலம்!

By Staff

சென்னை: நடிகைகள் பலரும் சினிமாவில் மார்க்கெட் உள்ளவரை நடிக்க வேண்டும் என்பதற்காக சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதில்லை.

மேலும், முகத்தை அழகுப்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி, உடல்வாகுகளை சரி செய்ய ஏகப்பட்ட ஆப்பரேஷன் செய்து வருவதால், சிலருக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.

அதை புரிந்து கொண்டு சிலர் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடுகின்றனர் என்றும் சிலரை புரிந்து கொண்டவர்கள் கிடைக்கும் போது திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

வெளியே சொல்வதில்லை

வெளியே சொல்வதில்லை

சில நடிகைகள் இதுபோன்ற சென்சிட்டிவான விஷயங்களை வெளியே சொல்லாமல் மறைத்து விடுவர். வெளியே தெரிந்தால், தேவையில்லாத வெட்டிப் பேச்சுக்களும் விமர்சனங்களும், விவாதங்களும், பிரச்சனைகள் வரும் என்பதால் மூடி மறைத்து வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தைகள் என்றே தெரியாமல் சில ஆண்டுகள் அப்ஸ்காண்ட் ஆகிவிட்டு பின்னர் குழந்தைகளை அறிமுகம் செய்து விடுவர்.

சினிமா மார்க்கெட்

சினிமா மார்க்கெட்

மாடலிங் துறையில் இருந்து விட்டு நடிகையாக வேண்டும் என்கிற முயற்சியில் சில நடிகைகள் போராடி ஏகப்பட்ட தியாகங்களை செய்து டாப் ஹீரோயினாக வந்து நிற்கும் போது, பல படங்களில் நடிக்க வேண்டிய சூழல் காரணமாக திருமணமே செய்து கொள்ளாமல் கடைசி வரை சிங்கிளாகவே வாழ்ந்து விட்டு செல்வதும் உண்டு. கோலிவுட்டில் சில சீனியர் நடிகைகள் இன்னமும் திருமணம் ஆகாமல், உள்ளனர். அதில், ஒரு பிரபல நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்க இதுதான் காரணம் என்கின்றனர்.

குழந்தை பெத்துக்க முடியாது

குழந்தை பெத்துக்க முடியாது

அந்த பிரபல நடிகையும் தனது உடம்பில் ஏகப்பட்ட காஸ்மெடிக்ஸ் சிகிச்சை செய்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளவே முடியாது என்கிற சூழலில் தான் அவர் இன்னமும் முரட்டு சிங்கிளாகவே உள்ளாராம். திருமணம் ஆகாமல் இத்தனை ஆண்டுகளை ஓட்டியும் உள்ளார் அந்த நடிகை. ஏற்கனவே சில வரன்கள் வந்த நிலையில், தனது நிலை பற்றி நடிகை எடுத்து சொன்னதும், மாப்பிள்ளைகள் தெறித்து ஓடிவிட்டார்களாம்.

தாங்கும் தோள் வேண்டும்

தாங்கும் தோள் வேண்டும்

உண்மையாக காதலித்து எந்த பிரச்சனை என்றாலும் பரவாயில்லை என தாங்கும் தோள் கிடைத்தால் மட்டுமே சாய்ந்துக் கொள்ள தான் தயார் என்கிற முடிவுக்கு வந்து விட்ட அந்த நடிகைக்கு இன்னமும் அப்படியொரு ஆள் கிடைக்காத நிலையில், அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சினிமாவில் நடித்து வருகிறாராம்.

போட்டு உடைத்த பிரபலம்

போட்டு உடைத்த பிரபலம்

பிரபல நடிகையின் விவகாரம் தற்போது பூதாகரமாக ஆகி உள்ள நிலையில், அந்த நடிகையும் அதனால் தான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதை பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசிய நிலையில் தற்போது கோடம்பாக்கத்தில் அடுத்த ஹாட் டாப்பிக்காக அந்த பிரச்சனை புகையத் தொடங்கி உள்ளது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X