நம்பர் நடிகை கணவருக்கு ரொம்பவே கவலையாம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த நபர் தானா?.. என்ன ஆச்சு?
சென்னை: ஒல்லி நடிகரின் படத்துக்குப் போட்டியாக தனது படத்தை இறக்கிவிடலாம் என நம்பர் நடிகையின் கணவர் முன்னதாக திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், அது தேவையில்லாத வேலை என பண்டிகை நாளுக்கு படத்தைக் கொண்டு வர திட்டமிடப்பட்டு அறிவிப்பும் வெளியானது. ஆனால், இன்னொரு தயாரிப்பு நிறுவனமும் அதே தேதியில் நடிகரின் படத்தை கொண்டு வரும் முடிவில் உறுதியாக உள்ள நிலையில், நடிகையின் கணவர் படம் பண்டிகை நாளில் வெளியாவதே டவுட்டு தான் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அந்த ஒல்லி நடிகரும் இயக்குநருக்கு ஃபேவராக இல்லாமல், பெரிய சம்பளம் கொடுத்து புக் செய்த அந்த இன்னொரு தயாரிப்பு நிறுவனத்துக்கே ஆதரவாக உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதனால், நம்பர் நடிகையும் அவரது கணவரும் சற்றே அப்செட் ஆகியிருப்பதாகவும் படத்தை அதே தேதியில் ரிலீஸ் செய்து விடலாமா? அல்லது வேறுவொரு தேதிக்கு தள்ளிப் போகலாமா? என்கிற ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக கூறுகின்றனர்.
நடிகருக்குத்தான் நஷ்டம்: நல்லா வளர்ந்து வரும் அந்த இளம் ஸ்லிம் ஹீரோ ஒரே நாளில் 2 படங்களை ரிலீஸ் செய்தால், கண்டிப்பாக வசூலில் மிகப்பெரிய அடியை சந்திப்பார் என்றும் ஒரு படம் டல் அடித்தாலும் அவருக்கு எதிரான நெகட்டிவிட்டி அதிகமாக பரவி இன்னொரு படத்துக்கும் அது மிகப்பெரிய ஆபத்தாக முடிய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
டைரக்டருக்கு கஷ்டம்: ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய படத்துக்கு கிடைத்த வரவேற்புகள் காரணமாக நம்ம படம் தான் பண்டிகை தேதிக்கு வரும் என ரொம்பவே உற்சாகத்தில் இருந்த இயக்குநருக்கு இப்போ ரொம்பவே கஷ்டமாகிடுச்சாம். ப்ரோமோஷன் பணிகளுக்கான நடிகரின் கால்ஷீட்டையும் போட்டி தயாரிப்பு நிறுவனம் பல நாட்கள் புக் செய்துள்ள நிலையில், அந்த படம் முந்திக் கொள்ளும் என்றே தெரிவதால், டைரக்டர் ரொம்பவே அப்செட்டில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
கணக்கு தப்பாகிடுச்சு: முன்னதாக மனைவியின் பேச்சைக் கேட்டு ஒல்லி நடிகர் படத்துடன் போட்டியாக வெளியிட திட்டமிட்டு இருந்தால் கூட படம் திட்டமிட்டபடி சீக்கிரமே வெளியாகி இருக்கும் என்றும் தற்போது இரண்டு பெரிய பண்டிகைகளும் மிஸ் ஆகிவிட்டால் எந்த விடுமுறை தேதியை லாக் செய்வது என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











