பிஞ்சுலயே பழுத்தது.. பாரே கதி.. மங்களகரமான நடிகையின் மறுபக்கம் ரொம்ப மோசமா இருக்காம்?
சென்னை: மங்களகரமான நடிகை என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த ஃபீல்ட் அவுட் நடிகை சமீப காலமாக பாரே கதியென இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. எந்தவொரு கஷ்டமும் படாத நிலையில், பிஞ்சுலயே பழுத்த அவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வந்ததும் தலைக்கனம் அதிகமாக மாறிவிட்டதாம்.
ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் இயக்குநர்களை எல்லாம் மதிக்காமல் ரொம்பவே ராங்கு காட்டி வந்த நிலையில், வீண் செலவுகளையும் நடிகை படப்பிடிப்புக்கு வந்தால் இழுத்து விடுகிறார் என சிலர் நடிகையின் லீலைகளை ஒவ்வொன்றாக போட்டுக் கொடுக்க அதன் பின்னர், பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்த நடிகை வேண்டாம் என பை பை காட்டி விட்டார்களாம்.

ஹீரோயின் என்கிற கெத்தாக இருந்த நடிகை ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அவரை யாரும் மதிக்காமல் கடந்து சென்ற போது தான் ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம். அந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போன நிலையில், குடிக்கு அடிமையாகி விட்டார் நடிகை என்கின்றனர்.
பாரே கதி: பட வாய்புகள் அதிகரித்ததும் பார்ட்டி, பப் என ஃபாரின் சரக்குகளை ருசி பார்க்க ஆரம்பிக்கும் நடிகர்களும் நடிகைகளும் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு காலையிலேயே போக வேண்டும் என்பதற்காக ரொம்பவே அளவோடு இருப்பார்கள். ஆனால், பட வாய்ப்புகள் இல்லை என்று தெரிந்து விட்டால் நடிகர்களும் நடிகைகளும் விரக்தியில் மதுவுக்கு ரொம்பவே அடிமையாகி விடுவார்கள் என்கின்றனர். அந்த மங்களகரமான நடிகையும் அப்படித்தான் குடிக்கு அடிமையாகி பாரே கதியென கிடக்கிறாராம்.
சகவாசம் சரியில்லை: மேலும், நடிகையின் சமீபத்திய சகவாசம் கொஞ்சம் கூட சரியில்லை என்றும் நடிகையை தேவையில்லாமல் பல சர்ச்சைகளுக்கும் சிக்கல்களுக்கும் இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதே கூட இருக்கும் அந்த ஆண் நண்பர் தான் என்றும் அந்த விவகாரம் எல்லாம் நடிகைக்கு புரியாமல் அவரை மலை போல நம்பிக் கொண்டு வாழ்க்கையை வீணடித்து வருவதாக சில தோழிகளே நடிகை குறித்து ஃபீல் பண்ணி பேசியது கோடம்பாக்கத்தில் தற்போது ஹாட் தகவலகாக புகைந்து வருகிறது.
பழையபடி வரணும்: நடிகைக்கு ரொம்ப சீக்கிரமே சினிமா சான்ஸ், ஸ்டார் அந்தஸ்த்து எல்லாம் கிடைத்த நிலையில், அதனை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லை. கூடிய சீக்கிரமே அவர் பழையபடி வரணும் என அவரது நலம் விரும்பிகள் ரொம்பவே எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











