அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ரெடி.. நடிகையின் மேனேஜர் பார்த்த மோசமான வேலை.. கடைசியில நடந்த ட்விஸ்ட்?
சென்னை: நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகையின் மேனேஜர் பார்த்த படுமோசமான செயலால் நடிகை ரொம்பவே அப்செட்டாகி விட்டதாக கிசுகிசுக்கள் கசிந்துள்ளன. நடிகையின் அனுமதியின்றி பல மோசமான வேலைகளை அவருக்கே தெரியாமல் பார்த்து வந்துள்ளார் அவரது மேனேஜர் என்கின்றனர்.
சினிமாவில் சரியான மேனேஜர்கள் இல்லாத நிலையில், பல பிரபலங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போயுள்ள கதைகள் ஆயிரம் உள்ளன. சரியான மேனேஜர்களை வைத்துக் கொண்டு இருக்கும் நடிகர்களின் வளர்ச்சி அட்டகாசமாகவும் அசத்தலாகவும் உள்ளதையும் பார்த்து வருகிறோம்.

இளம் நடிகர்கள் கூட சில மூத்த நடிகர்களுக்கு மேனேஜராக இருப்பவர்களையே தங்களுக்கும் மேனேஜர்களாக நியமிக்கவும் அதுதான் காரணம் என்கின்றனர். இந்நிலையில், பிரபல நடிகையின் மேனேஜர் ஒருவர் நடிகைக்கு எதிராக செய்த சதி வேலைகள் அம்பலமாகி உள்ளதாக கூறுகின்றனர்.
அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ரெடி: வில்லி நடிகையாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அந்த பிரபல நடிகைக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக காரணமே அவரது மேனேஜர் தான் என்கின்றனர். சரியான தயாரிப்பு நிறுவனங்களை அணுகாமல் விடுவதும், நடிகையை சரியான வழிகாட்டுதலுடன் நல்ல இயக்குநர்களின் படங்களில் நடிக்க விடாமல் செய்யும் வேலையை பார்த்து வந்த மேனேஜர், நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கும் ரெடி என வக்கிரம் பிடித்த தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசி 25 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றியதாக மேனேஜர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்ப அந்த நடிகைக்கு அது தெரிந்து ஷாக் ஆகிவிட்டாராம்.
நம்புனது குத்தமா?: ஒரு அண்ணனை போலத்தானே உங்களை நம்பி கூடவே வைத்திருந்தேன். இப்படி மாமா வேலை பார்க்குறதுக்கா என்கிட்டயே காசு வாங்கிட்டு, மற்றவர்களிடம் என்னை வைத்து வியாபாரம் பண்ணியிருக்கிங்க, அசிங்கமா இல்லை என திட்டி வேலையை விட்டே அனுப்பி விட்டாராம். மேலும், ஏமாந்துப்போன தயாரிப்பாளரின் குரூர புத்தியை புரிந்துக் கொண்ட நடிகை என் மேனேஜர் தான் காரணம் முடிஞ்சா அவன் மேல ஆக்ஷன் எடு, நீயும் சேர்ந்து தான் கம்பி எண்ணுவ என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு வந்துவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. பல நல்ல படங்களில் தான் நடிக்காமல் போனதற்கும் போட்டி நடிகைகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பல ஆண்டுகளாக மேனேஜர் ஏமாற்றி வந்த விஷயம் எல்லாம் நடிகைக்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











