வருத்தத்தில் பிரபல கொழுகொழு நடிகை...திருமணம் செய்து செட்டிலாக யோசனை
சென்னை : ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பிரபலமான அந்த கொழு கொழு நடிகை, திடீரென காணாமல் போனார். மூன்று ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

உடல் எடையை குறைத்தால் பட வாய்ப்புக்கள் குவியும் என எதிர்பார்த்த நடிகைக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. நடிகருடன் ஏற்பட்ட காதலும் தோல்வியில் முடிந்தது. கைவசம் தற்போது நான்கைந்து படங்கள், வெப் சீரிஸ் என பலவற்றிலும் நடித்து வந்தாலும், மூன்று ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீசவில்லை.
என்ன தான் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்தாலும், நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. குறிப்பாக முன்னாள் காதலரான அந்த நடிகருடன் நடித்த படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. எவ்வளவு போராடியும் தற்போது வரை அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. மூன்று ஆண்டுகள் கேப் ஆகி விட்டதால் ரசிகர்கள் தன்னை மறந்திருப்பார்கள். அப்படியே தான் தொடர்ந்து நடித்தாலும் முன்பு இருந்த வரவேற்பு இருக்காது என நடிகை நினைக்கிறார்.
இதனால் கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாமா என யோசித்து வருகிறாராம் கொழு கொழு நடிகை. திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த பலர் அறிவுரை வழங்கி வருகிறார்களாம் இவருக்கு.
இதற்கிடையில் முன்னாள் காதலருடன் மீண்டும் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொண்டார்களாம். காதல் உறவை மீண்டும் தொடரலாமா என்று கூட பேசினார்களாம். நீண்ட காலத்திற்கு பிறகு பழைய காதலை கண்ட நடிகைக்கும், காதல் மெல்ல எட்டி பார்த்ததாம். அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தற்போது யோசித்து வருகிறாராம் அந்த நடிகை.
தாங்கள் காதலித்த காலத்தில் சாதாரண நடிகராக இருந்த அந்த நடிகர், காதல் பிரிவிற்கு பிறகு டாப் ஹீரோ ஆகி விட்டாராம். இதனால் கூட நடிகைக்கு அவர் மீது மீண்டும் காதல் வந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்று கூட சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











