15 வயசு கூட ஆகல.. மகளை டார்ச்சர் செய்யும் நடிகை.. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணமா?

By Staff

சென்னை: பிரபல நடிகை தனது மகளை எப்படியாவது சினிமாவில் ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக அவரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. சினிமாவில் ஏகப்பட்ட வாரிசு நடிகர்கள் வார வாரம் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர்.

பல வாரிசு நடிகர்களின் படங்களை மக்கள் புறக்கணித்து வந்தாலும், சில வாரிசு நடிகர்களின் படங்கள் சிறப்பாக ஓடிவிடும் நிலையில், எப்படியாவது தன்னை போலவே தனது குழந்தைகளையும் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக மாற்றிவிட வேண்டும் என்கிற முயற்சியில் பிரபலங்கள் போட்டிப் போட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

Popular Actress tortures her daughter for cinema chance shocks kollywood

அந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவர் தனது மகளை எப்படியாவது சீக்கிரமே ஹீரோயினாக்கி விட வேண்டும் என்பதற்காக அவரை தினமும் படாதபாடு படுத்தி வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

மகளுக்கு விருப்பமில்லை: சிறு வயது முதலே கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து லிட்டில் பிரின்சஸ் ஆக சொகுசாக வளர்த்துவிட்டு தற்போது ஹீரோயினுக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்கிற முடிவில் மகளின் உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பிடித்த உணவுகளை மொத்தமாக நடிகை கட் செய்து விட்டாராம். மேலும், ஜிம்முக்கு போ என்றும் டார்ச்சர் செய்து வருகிறாராம். ஆனால், நடிகையாக வேண்டும் என்றும் அம்மாவை போல ஆக வேண்டும் என்றெல்லாம் அந்த பெண்ணுக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்லை என்கின்றனர்.

15 வயதுலயே டிரெய்னிங்: டான்ஸ், குதிரை ஏற்றம், பாக்ஸிங் பயிற்சி என பல விஷயங்களை ஹீரோயினாக வேண்டி 15 வயசுலயே குழந்தையை போட்டு பாடாய்ப்படுத்தி வருகிறாராம் அந்த பிரபல நடிகை. அதனால் தான் மகளுக்கு சினிமா மீதே நாட்டமில்லாமல் போய்விட்டதாம். தனது நண்பர்களுடன் விளையாட கூட முடியவில்லை என சமீபத்தில் பிரபலம் ஒருவரிடம் நடிகையின் மகள் புலம்பிய நிலையில், இந்த தகவல்கள் அப்படியே காத்து வாக்குல பரவி கோடம்பாக்கத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

தப்பான உதாரணம்: நானெல்லாம் அந்த காலத்தில் 15 வயதிலேயே சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் ஆகிட்டேன் என்றும் நீயும் என்னை போல ஆனால் தான் இந்த சொகுசு வாழ்க்கை எப்போதுமே நீடிக்கும் என்கிறாராம். அனைத்துக்கும் காரணம் கணவருடன் நடிகைக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் என்றும் கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வரும் நிலையில், மகளை ஹீரோயினாக்கி பெரிதாக சம்பாதித்து கெத்துக் காட்ட வேண்டும் என அந்த சீனியர் நடிகை சீரியஸாக மகளை டார்ச்சர் செய்து வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X