Don't Miss!
- News
"சீக்ரெட் மெசேஞ்.." கஞ்சா கும்பல் தப்பிக்க உதவிய எஸ்ஐ.. தட்டி தூக்கிய போலீஸ்! கோவையில் அதிரடி கைது
- Lifestyle
ஆண்களே! பெண்களின் உச்சக்கட்டம் பற்றி நீங்க நினைக்கிறது தப்பாம்... அப்ப நீங்க எப்படி செயல்படனும் தெரியுமா?
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
தமிழ் சினிமாவையே கைப்பற்ற பிளான் போடும் பிரபலம்...அவர் வைப்பது தான் சட்டமாமே
சென்னை : தமிழ் சினிமாவில் டாப் இடத்தை பிடிக்கனும், அதிக சம்பளம் வாங்கனும், சினிமா பாப்புலாரிட்டியை வைத்து அரசியலில் பெரிய ஆள் ஆகணும் என்று தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் பிளான் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த பிரபலம் மட்டும் தமிழ் சினிமாவையே கைப்பற்ற பிளான் பண்ணுறாராம்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அவர் வைப்பது தான் சட்டமாக உள்ளதாம். பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் அவர் சொல்லும் தேதியில் தான் ரிலீஸ் செய்ய வேண்டுமாம். அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலை எடுத்து, ஸ்கெட்ச் போட்டு அவற்றை தூக்கி விடுகிறாராம்.
அருண் விஜய் பையனுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா -ஜோதிகா... எதுக்குன்னு பாருங்க!

பிரபலம் போடும் பக்கா பிளான்
ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்களை மட்டும் வாங்கி வாங்க அந்த பிரபலம், தற்போது வரிசையாக அனைத்து படங்களையும் வாங்கி வருகிறார். இவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், இரண்டு பெரிய பிளான்கள் தான் என கூறப்படுகிறது. ஒன்று பெரிய நடிகர்களின் படங்களை எல்லாம் வாங்கி விட்டால், அதற்கு பிறகு அவர் எடுப்பது, அவர் சொல்வது தான் அங்கு நடக்கும் என்பதாலாம்.

இது தான் காரணமா
மற்றொன்று, சமீப காலமாக நடிகர்கள் அரசியலுக்கு வர அதிகம் ஆர்வம் காட்டி, அரசியல் வசனங்களை அதிகம் பேசி மக்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்த்து வருவதால் அவர்களை அடக்கி, தட்டி வைப்பதற்காகவாம். இதில் மற்றொரு உள்நோக்கம் என்னவென்றால், பெரிய நடிகர்களை டம்மியாக்கி விட்டால் தனக்கு ஈசியாக பெரிய நடிகர் அந்தஸ்து கிடைத்து விடும் என்பதற்காகவும் தானாம்.

அடப்பாவமே...இப்படியா செய்வது
ஏற்கனவே பலமுறை தள்ளி வைக்கப்பட்ட அந்த டாப் நடிகரின் படத்தை, இந்த பிரபலம் வாங்கி விட்டதால், அவர் சொல்லும் தேதியில் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டு விட்டாராம். அதற்கு காரணம் தனது படம், ஒரு வார கேப்பில் ரிலீசாக உள்ளதால் தானாம். ஒரு வார கேப்பில் தானே ரிலீசாகிறது, அதனால் என்ன. எதற்காக தேதியை மாற்ற வேண்டும் என கேட்டதற்கு, ஒரு வார கேப்பில் ரிலீஸ் ஆனால் அந்த நடிகரின் படத்தையும், தனது படத்தையும் ஒப்பிட்டு விமர்சனங்கள் வர வாய்ப்புள்ளதாக நினைத்து தான் இந்த கண்டிஷனை போட்டுள்ளாராம். படக்குழுவும் வேறு வழியில்லாமல், படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய தேதியை மாற்றி வருகிறதாம்.

அடுத்த விக்கெட் யாருப்பா
ஏற்கனவே உச்ச நடிகரின் படத்தை வாங்கி அவரை ஓரளவிற்கு காலி செய்து விட்டார்கள். அடுத்து தயாரிப்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி அவற்றின் ரிலீஸ் தேதி அடுத்தடுத்து மாற்றி வைத்து, ரசிகர்களுக்கு அந்த படத்தின் மீது சலிப்பே வரும் அளவிற்கு செய்து விட்டார்கள். அந்த ஸ்டார் நடிகரின் படத்திற்கும் பல குடைச்சல்களை கொடுத்து, அவரது இமேஜை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே படத்திற்கு ஓவர் பில்ட்அப் கொடுத்து, கடைசியில் ரசிகர்களே அந்த படத்தை கழுவி ஊற்றும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார். அந்த ஸ்டார் நடிகர் இந்த படத்தை முடிப்பதற்குள் படாத பாடு படுத்தி விட்டாராம் அந்த பிரபலம்.

மொத்த சினிமாவும் காலியா
இப்படி பல வழிகளிலும் காய் நகர்த்தி தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பிளானில் ஏறக்குறைய பாதிக்கும் மேல் பக்காவாக முடித்து விட்டாராம். சினிமாவிலும் வளர்ந்த மாறி ஆகிடுச்சு, சினிமா உலகத்தையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது போலவும் ஆகிடுச்சு. ஆக, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வருகிறாராம் அந்த பிரபலம்.