Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
அந்த வம்பே வேண்டாம்.. மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போல ஹீரோக்களை பார்க்கும் பிரம்மாண்டம்!
சென்னை: கோலிவுட்டிலும் வாரிசுகளின் டார்ச்சர்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எல்லாம் அழகாகத் தட்டித் தூக்கி வருகின்றனர்.
அடம்பிடித்த மகளுக்கு அப்பா வாங்கிக் கொடுத்த பொம்மை போல சினிமா சான்ஸை வாங்கிக் கொடுத்துள்ளார் அந்த பிரம்மாண்டம்.
ஆனாலும், அப்படியே அவர் இஷ்டத்துக்கு விட்டு விடாமல், பார்த்து பார்த்து பல விஷயங்களில் இயக்குநரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் லீக் ஆகி வருகின்றன.
செப்டம்பரில்
முடிவடையும்
வாரிசு
பட
சூட்டிங்..
ஆனாலும்
தளபதி
67
அறிவிப்புக்காகத்தான்
வெயிட்டிங்!

காஸிப் இல்லாத ஹீரோ
ஹீரோயினாக அறிமுகம் ஆகவேண்டும் என மகள் ஒற்றைக் காலில் நின்ற நிலையில், எந்தவொரு காஸிப்பும் இல்லாத ஒரு ஹீரோவை தேடிப் பிடித்து மகளை ஜோடி சேர்த்து இருக்கிறார் அந்த பிரம்மாண்டம். கவர்ச்சி உடை எல்லாம் வேண்டாம், பாரம்பரியான உடையுடன் நடி என ஏகப்பட்ட கண்டிஷன்களையும் அப்பா என்பதால் அடுக்கி பத்திரமாக பார்த்து வந்த நிலையில், அடுத்த படத்துக்கு அந்த ஹீரோவுக்கு பச்சை சிக்னல் காட்டி பதற வைத்து விட்டார் மகள்.

அந்த வம்பே வேண்டாம்
ஆனால், ஒரேயடியாக அந்த வம்பே வேண்டாம் என ஒரே முடிவாக அப்பா இருந்த நிலையில், வேறு வழியில்லாமல் தனது சினிமா வாழ்க்கையை ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ளவும் மனமில்லாமல் அப்பா கை காட்டிய அடுத்த நடிகர் படத்தில் தற்போது நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் வாரிசு நடிகை என கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சாக எழுந்து வருகிறது.

மனைவிக்கு கட்டுப்பட்ட ஹீரோக்கள்
மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போல ஹீரோக்களை இப்படியொரு கண்டிஷன் உடன் தேடி தேடி பார்த்து செலக்ட் செய்து வருகிறாராம் அந்த பிரம்மாண்டம் என பரவலாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. அதிலும், குறிப்பாக சினிமாவில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் மனைவிக்கு கட்டுப்பட்ட ஹீரோக்கள் உடனே ஜோடி சேர வேண்டும் என்றும், திருமணம் ஆகாத ஹீரோக்கள் வேண்டவே வேண்டாம் என்றும் மேனேஜரிடன் ஆர்டரே போட்டு விட்டாராம்.

மறுத்தால் திருமணம்
அப்பாவின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு நடித்தால் சினிமாவில் நடிக்கலாம் என்றும், மறுத்து தனது இஷ்டத்துக்கு முடிவெடுத்தால், உடனடியாக திருமணம் செய்து வைத்து விடுவேன் என மிரட்டி இருக்கிறாராம். அதற்கு கட்டுப்பட்டே அந்த இளம் நடிகையும் ஹீரோக்களை அண்ணா என்று ஹீரோக்களின் மனைவியை அண்ணி என்றும் அழைத்து பேச வேண்டிய சூழலிலேயே சினிமாவில் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

நல்லது தான்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது சரியானது தான் என மகளும் புரிந்து கொண்டு அப்பாவின் ஆசையையும் தனது ஆசையையும் ஒரு சேர நடத்தி வருகிறாராம். எல்லாமே தன்னுடைய நன்மைக்காகத் தான் சொல்கிறார் என்றும் அவரது முடிவு தனக்கு ஒரு போதும் எந்தவொரு பிரச்சனையையும் பிரஷரையும் கொடுக்காது என்றும் இதுபற்றி விசாரிப்பவர்களிடம் கூறி வருகிறாராம்.