லேட்டஸ்ட் லெக் தாதா.. அந்த இயக்குநர் நடிச்சாலே ஃப்ளாப் தானாம்.. நடுங்கும் தயாரிப்பாளர்கள்?
சென்னை: தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகர்களுக்கும் வில்லன் நடிகர்களுக்கும் அந்த காலத்தில் இருந்தே பெரும்பாலும் பஞ்சமில்லாத நிலையில், சமீப காலமாக நல்ல ஹீரோக்களுக்கு கூட பெரிய பஞ்சம் நிலவி வரும் நிலையில், குணசித்ர நடிகர்களுக்கும் அதே நிலைமை தான் என்கின்றனர்.
அந்த காலி பெருங்காய டப்பா பிரச்சனையை தீர்த்து வைக்க திடீரென இயக்குநர்கள் எல்லாம் நடிக்க ஆரம்பித்து விட்டனர். பல இயக்குநர்கள் நடிகர்களாக மாறிய நிலையில், அந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கத் தொடங்கியதும், மேலும் ஒரு அரை டஜன் இயக்குநர்கள் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், நடித்தால் பெரிய சம்பளம் கொடுக்கிறாங்கப்பா என நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், பிரபல டைரக்டர் ஒருவரும் திடீரென நானும் நடிக்கிறேன் பாருங்க என களத்தில் இறங்கிய நிலையில், அவர் நடித்து வெளியான பல படங்களும் ஃப்ளாப் ஆகி வருவதால், அவரை தொடர்ந்து கமிட் செய்ய தயாரிப்பாளர்கள் நடுங்கி வருவதாக கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் சூப்பர்: பல வருடங்களுக்கு முன்னர் அவர் ஒரு ஓஜி இயக்குநராக தமிழ் சினிமாவில் சில தரமான படங்களை கொடுத்துள்ளார். அந்தளவுக்கு படங்களை கொடுக்க இப்போது உள்ள இயக்குநர்களால் கூட முடியாது என்பதெல்லாம் மறக்க முடியாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் லெக் தாதா: ரொம்ப நாளாவே ஒரு படத்தை இயக்குவதற்காக அந்த பிரபல வேண்டப்பட்ட நடிகரின் கால்ஷீட் கேட்டு கிடைக்காமல் இருக்க, இதுக்கு மேல பொறுக்க முடியாது சாமி என நடிக்க வந்துவிட்டார். ஆனால், சினிமாவுக்குள் வந்து தனது ஒட்டுமொத்த வித்தையையும் அவர் இறக்கினாலும், எல்லாம் நல்லாதான் இருக்கு என அவரை தொடர்ந்து பல படங்களில் இயக்குநர்கள் கமிட் செய்ய அவர் தற்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் லெக் தாதாவாகவே மாறியுள்ளார் என்கிற பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஒரு படமும் ஓடல: மாஸ் நடிகர் படம் முதல் சைக்கோ நடிகர் படம் வரை பல படங்களில் அந்த இயக்குநர் சிறப்பாக நடிக்கிறார் என்று புகழ்ந்து வந்தாலும், என்ன மாயமோ தெரியவில்லை, அவர் கமிட்டாகி நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்விப் படங்களாக மாறி வரும் நிலையில், தொடர்ந்து அந்த டைரக்டரை நடிகராக்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கும் அளவுக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து அந்த டைரக்டர் எப்படி மீண்டு வரப்போகிறாரோ தெரியவில்லை. ஏற்கனவே குடும்பத்தில் வேறு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











