குழந்தை பெத்தா என்ன?.. ஒன் நைட் ஸ்டாண்டுக்கு நடிகையை கூப்பிட்ட பிரபலம்.. ரொம்ப கேவலம்!
சென்னை: சமீபத்தில் குழந்தை பெத்த பிரபல நடிகையை சினிமா பிரபலம் ஒருவர் ஒன் நைட் ஸ்டாண்டுக்கு கூப்பிட்டதாக கிளம்பிய உள்ள கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என சில அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளை அந்த நடிகை செய்துள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், இப்போது மட்டும் ஏன் அடம்பிடிக்கிற என அந்த பிரபலம் தொடர்ந்து நடிகையை டார்ச்சர் செய்துள்ளாராம்.
மார்க்கெட் இழந்து படங்கள் வரவில்லை என்றால் சில நடிகைகள் ஏதாவது தொழில் செய்து வருமானத்தை ஈட்ட வேண்டும் என எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்கின்றனர். சமீப காலமாக சில சின்னத்திரை நடிகைகளே தனியாக சப்ஸ்க்ரிப்ஷன், ஆப் என ஏகப்பட்ட பிசினஸ்களை ஆரம்பித்து லட்சக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

ஆனால், ஒரு சில நடிகைகள் அந்த பக்கமே தலை வைத்து படுக்காமல் தங்களுடைய திறமையை மட்டுமே நம்பி சாதித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் ஷார்ட் கட் பயன்படுத்தினாலும், திருமணமாகி, குழந்தைகளை பெற்றுக் கொண்ட பின்னர், கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர்.
சான்ஸ் கொடுத்தாலே சில்மிஷம்: டாப் ஹீரோக்களின் படங்களில் ஒரு பிரபல நடிகையை புக் செய்தால் கூட அந்த நடிகையை எப்படியாவது அடைய வேண்டும் என சில தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமானவர்களும், சில இயக்குநர்களும் ஒரு சில இடங்களில் முன்னணி நடிகர்களே மூடோடு சுற்றுவதாக பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட பிரபலங்களின் பெயர்களை ஓபனாக அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தினால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாது என்பதால் மறைமுகமாகவே பேசி வருவது மற்ற நடிகைகளுக்கும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது என்கின்றனர்.
குழந்தை பெற்ற பிறகும்: தனக்கு பிடித்த நடிகரை திருமணம் செய்துக் கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டு தனக்குப் பிடித்த சினிமாவையும் விட்டு விடாமல் நடித்து வரும் பாப்புலரான நடிகைக்கே சமீபத்தில், ஒன் நைட் ஸ்டாண்ட் டார்ச்சரை பிரபலம் ஒருவர் கொடுத்துள்ளார் என்று பகீர் கிசுகிசுகள் கிளம்பி உள்ளன. நடிகை தனக்கு குழந்தையே பொறந்து விட்டது என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, நான் அதுக்கான ஆள் கிடையாது என எவ்வளவோ சொல்லியும் அந்த பிரபலம் கேட்கவே இல்லையாம்.
வெளியேறிய நடிகை: தொடர்ந்து தனக்கு நடந்த கொடுமைகளை படக்குழுவினரிடமும் குறிப்பாக ஹீரோவிடமே நடிகை எடுத்துச் சொல்லியும் யாருமே அந்த பிரபலத்தை அடக்க முடியாத சூழலில் தற்போது நடிகை அதிரடியாக அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய சீக்கிரமே அந்த பிரபலம் அம்பலப்படுவார் என்றும் அதற்கான வேலைகளை நடிகை பார்ப்பார் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications