»   »  குயில் மீது மையல் கொண்ட வெயில்

குயில் மீது மையல் கொண்ட வெயில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெயில் பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும், பின்னணிப் பாடகி சைந்தவிக்கும் இடையே காதல் மலர்ந்து, படு வேகமாக நெருக்கம் பிக்கப் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

காதலைச் சொல்லும் படங்களைக் கொடுக்கும் சினிமாக்காரர்கள் காதலில் சிக்குவது புதிதில்லை. பலர் காதலித்துள்ளனர், கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். சில காதல்கள் பாதியிலேயே புட்டுக்கவும் செய்துள்ளது.

தமிழ் சினிமாவிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சமீபத்திய காதல் சூர்யா, ஜோதிகா காதல்தான். கடைசி வரை காதலிக்கிறோம் என வெட்டவெளிச்சமாக சொல்லாமலேயே கல்யாணத்தையும் செய்து கொண்டு செட்டிலாகி விட்டது இந்த மோஸ்ட் பாப்புலர் காதல் ஜோடி.

தற்போது கோலிவுட்டைக் கலக்க ஆரம்பித்துள்ளது புதிய காதல் ஜோடி. இது இசையும், குரலும் இணைந்த காதல்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் ஜி.வி.பிரகாஷும், பின்னணிப் பாடகி சைந்தவியும்தான் காதல் ஜோடி.

சைந்தவியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்நியனில் இடம் பெற்ற அண்டங்காக்கா கொண்டைக்காரி, அச்சு வெல்ல தொண்டைக்காரி பாடலுக்குக் குரல் கொடுத்து அசத்தியவர்தான் சைந்தவி. இதுதவிர ஏராளமான பிரபல பாடல்களைப் பாடியுள்ளவர் சைந்தவி.

கல்லூரி மாணவியான சைந்தவி, தனது இனிய குரல் வளத்தால் வேகமாக முன்னேறி வரும் இளம் பின்னணிப் பாடகியாவார். இவருக்கும், பிரகாஷுக்கும்தான் இப்போது தீவிரக் காதலாம்.

பிரகாஷ் இசையில் சைந்தவி பாட வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்தக் காதல் இப்போது வலுவடைந்துள்ளதாம். இசையை விட சைந்தவியின் குரலையே பிரகாஷ் இப்போதெல்லாம் அதிகம் ரசிக்கிறாராம்.

இருவரும் தினசரி நேரில் சந்திக்க மறப்பதில்லை என்கிறார்கள். சேர்ந்தே பல இடங்களுக்கும் போய் காதலை பாலிஷ் செய்து கொள்கிறார்களாம். இரவிலும் கூட இருவரும் காரில் சுற்றி வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது. நள்ளிரவிலும் கூட இந்த காதல் நகர் வலம் நீடிக்கிறதாம்.

காதலில் தீவிர கவனம் செலுத்தும் பிரகாஷ், தனது பட வேலைகளில் ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு விட்டதாகவும் ஒரு குமுறல் தயாரிப்பாளர்கள் தரப்பில் கிளம்ப ஆரம்பித்துள்ளதாம்.

இந்தக் காதல் கல்யாணத்தில் முடியுமா அல்லது என்னாகும் என்ற கேள்வியுடன் பலரும் இந்த இசைக் காதலர்களை மெளனமாக கவனித்து வருகிறார்கள்.

காதலோடு, வேலையையும் சேர்த்து பாருங்கப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil