»   »  பிரசாந்த்துக்கு கெட்டிமேளம்

பிரசாந்த்துக்கு கெட்டிமேளம்

Subscribe to Oneindia Tamil

இத்தனை காலமாக எலிஜிபிள் பேச்சலர் லேபிளுடன் சுற்றிக் கொண்டிருந்த பிரசாந்த் காதல் வலையில் விழுந்து,சப்தம் போடாமல் கல்யாணத்துக்கும் தயாராகி விட்டார்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் வதந்திகளில் சிக்காமல் வாழ்க்கையைக் ஓட்டிக் கொண்டிருக்கும் நல்லபிள்ளை பிரசாந்த். இதுவரை முன்னணி நாயகிகள் பலருடன் நடித்திருந்தாலும், எந்த நடிகையுடனும் பிரசாந்த்கிசுகிசுக்கப்பட்டதில்லை.

அப்படிப்பட்ட அப்பாவி பிரசாந்த் சத்தமே போடாமல் ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். அந்தக் காதல்நாயகியை இப்போது வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ளவும் போகிறார்.

பிரசாந்த்தின் மனம் கவர்ந்த பெண் ஏற்காட்டைச் சேர்ந்தவர். பெயர் ராஜ ராஜேஸ்வரி. தொழிலதிபர் ராஜேஷ்வர்தயாள் என்பவரின் மகள். பிரசாந்த் குடும்பத்திற்கும், ராஜேஷ்வர் தயாளுக்கும் நட்பு உண்டு.

அந்த வகையில் கல்லூரியில் (சென்னையில்) படித்தபோதிருந்தே பிரசாந்த்துக்கு அறிமுகமாகியுள்ளார் ராஜராஜேஸ்வரி. அவரைப் பிடித்துப் போக வீட்டில் கூறியுள்ளார் பிரசாந்த். மகனின் விருப்பத்தை தட்டாமல் தந்தைதியாகராஜனும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் ஏற்காட்டில் வைத்து நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டனர்.விரைவில் கல்யாணம்.

Read more about: actress, cinema, prashanth, ramya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil