»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவின் அறிமுக நாயகியான பிரியாமணி, தனது முதல் படத்தின் நாயகனான வசீகரனை வசீகரித்துவிட்டதாக செய்தி உலா வருகிறது.

பாரதிராஜா இயக்கும் படம் கண்களால் கைது செய். இதில் பெங்களூரைச் சேர்ந்த மாடல் பிரியாமணியும்,வசீகரனும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

அட்டகாசமான அழகுடன் உள்ள பிரியாமணிக்கும், அதே அளவுக்குஹேண்ட்சம்மாக உள்ள வசீகரனுக்கும் இடையே நிஜத்திலும் காதல் பூத்து விட்டதாம்.

இருவரையும் அடிக்கடி ஜோடியாக தியேட்டர்களில் பார்க்க முடிகிறது. இருவருமே இந்தி மற்றும் ஆங்கிலப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதால், அந்தப் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்குகைகோர்த்தபடி வந்து செல்வதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

இதனால் கோலிவுட்டின் லேட்டஸ்ட் காதலர்கள் பட்டியலில் இருவரையும் சேர்த்து விட்டனர்.


தொடர்பான செய்திகள் மும்பை மாடல் ஒருவருடன் பிரியாமணிக்கு காதல் இருந்து வந்தது. அது என்ன ஆனது என்றுதெரியவில்லை.

முதல் படம் வெளியாகும் முன்னரே பிரியாமணிக்கு ஏகத்துக்கும் வாய்ப்புக்கள் குவிந்துள்ளன. தனுஷுடன்பாலுமகேந்திரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந் நிலையில் இந்தக் காதலால் சான்ஸ்கள் கை நழுவிப்போகலாம் என அவருக்கு வேண்டியவர்கள் எடுத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளார்களாம்.

உதாரணத்துக்கு ஸ்னேகாவின் கதையை அவரிடம் சொல்கிறார்களாம். ஸ்ரீகாந்துடன் அவருக்குக் காதல்அரும்பியதால் ஸ்னேகாவை தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள் ஓரம் கட்டியது நினைவிருக்கலாம். இதன் பின்னர்ஸ்ரீகாந்துடனான உறவை முறித்துக் கொண்டார் ஸ்னேகா.

இது ஒரு பக்கம் இருந்தாலும், முதல் படம் வருவதற்குள், காதலை ரிலீஸ் செய்து விட்ட இந்த ஜோடிக்கு அந்தப்படத்தின் இயக்குனர் பாரதிராஜாவின் ஆசி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil