»   »  ஆங்கர் அடிக்கும் ப்ரியாமணி

ஆங்கர் அடிக்கும் ப்ரியாமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் மூலம் தமிழில் மார்க்கெட்டை கொஞ்சம் போல ஸ்டெடி ஆக்கியிருக்கும் ப்ரியா மணி தெலுங்கிலும் வலுவான ஆங்கரை போட ஆரம்பித்துள்ளார்.

பருத்தி வீரனுக்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட சீந்தப்படாத சீதேவியாக இருந்தார் ப்ரியா மணி. ஆனால் பருத்தி வீரனுக்குப் பிறகு ப்ரியாவின் முகவரியே மாறிப் போய் விட்டது.

பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி ஓடி வருகின்றன. இருந்தாலும் நல்ல கதையாக நடிக்க வேண்டும் என்று நிதானத்துடன் அணுகி வருகிறார் ப்ரியா. அதேசமயம், தெலுங்கிலும் ஒரு கண் வைத்துள்ள ப்ரியாவிடம் இப்போது 2 தெலுங்குப் படங்கள் உள்ளதாம்.

அதில் ஒன்று தமிழில் வெளியான புன்னகை தேசத்தின் ரீமேக். இதில் தமிழில் சினேகா நடித்த வேடத்தில் ப்ரியா மணி நடிக்கிறாராம். தமிழில் ஹீரோவாக நடித்த தருணே இப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறாராம்.

தமிழைப் போலவே மெதுவாக தெலுங்கிலும் வலுவாக காலூண்றி விட வேண்டும் என்று தீவிரமாக உள்ளாராம் ப்ரியா. அத்தோடு ஹீரோ தருணுடன் நெருங்கிப் பழகவும் ஆரம்பித்துள்ளாராம் ப்ரியா.

இதை டோலிவுட்காரர்கள் படு சீரியஸாக பேச ஆரம்பித்துள்ளனராம். ஆனால் அதை ப்ரியா காஷுவலாக எடுத்துக் கொள்கிறாராம். சினிமாவில் வதந்திகள் சகஜம், அப்படித்தான் இந்த வதந்தியையும் நான் எடுத்துக் கொள்கிறேன் என்கிறார் கூலாக.

அதுவும் சரிதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil