»   »  ஒரு 'மம்மி'யின் பொறுமல்!

ஒரு 'மம்மி'யின் பொறுமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
எனது மகளை விட ஷ்ரியா பெரிய ஸ்டாரா, அவரைப் போய் எல்லோரும் துரத்துகிறார்கள் என்று கொக்கரித்து வருகிறாராம் ப்ரியா மணியின் தாயார்.

பருத்தி வீரனுக்கு முன்பு வரை ப்ரியா மணி யாரும் சீந்தாத சிந்தாமணியாக இருந்து வந்தார். ஆனால் பருத்தி வீரன் அவரது திரையுலக வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது.

இப்போது ப்ரியா மணியைத் தேடி பல பட வாய்ப்புகள் பொங்கி வரும் காவிரி போல ஓடி வருகின்றன. ஆனால் பருத்தி வீரன் டைப் கதையுடனேயே பலரும் அணுகுவதால் கடுப்பாகிப் போன ப்ரியா, இனிமேல் கிராமத்து கேரக்டர்களே செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

தன் மீது படிந்து விட்ட கிராமத்துப் பெண் இமேஜைத் துடைத்தெறிவதற்காக அவர் எடுத்த முடிவுதான் மிதமிஞ்சிய கிளாமர். கிளாமர் கேரக்டர்களில் மட்டுமே கொஞ்ச நாளைக்கு நடிக்கப் போகிறாராம். மலைக்கோட்டை படத்தில் கூட கிளாமரில் பின்னியிருந்ததற்கு அதுதான் முக்கியக் காரணம்.

இதுதவிர திரையுலக விழாக்களுக்கும் கூட படு கிளாமராகத்தான் டிரஸ் அணிந்து வருகிறார். மொத்தத்தில் முன்பை விட படு கலர்புல்லாக காணப்படுகிறார் ப்ரியா.

ப்ரியா லைம் லைட்டுக்கு வந்தவுடனேயே அவரது தாயாரும் லைம் லைட்டுக்கு வந்து விட்டார். ப்ரியாவுடனேயே கூட வரும் இவர் தற்போது முன்னணியில் உள்ள நடிகைகளுடன் ப்ரியாவை ஒப்பிட்டு யாராவது பேசினால் கோபமாகி விடுகிறாராம்.

குறிப்பாக ப்ரியா அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்காத ஹீரோயின் இப்போதைக்கு ஷ்ரியாதானாம். அவரது பெயரைக் கேட்டாலே கடுப்பாகி விடுகிறாராம். ஷ்ரியாவிடம் என்ன இருக்கிறது என்று எல்லோரும் அவரையே நாடுகிறார்கள்.

என் மகள் எல்லாவகையிலும் ஷ்ரியாவை விட பெஸ்ட். அப்படி இருக்கையில் இத்தனை நாட்களாக அவரை தமிழ் சினிமா மிஸ் செய்து விட்டது. இனிமேலாவது அதை தமிழ்த் திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறாராம்.

முன்பு திரிஷாவை வம்புக்கு இழுத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் ப்ரியா மணியின் மம்மி. ஆனால் சிவாஜிக்குப் பிறகு ஷ்ரியா பிக்கப் ஆகி விட்டதால், இப்போது ஷ்ரியாவைப் பிடிக்காமல் போய் விட்டதாம் அவருக்கு.

Read more about: priyamani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil