»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தனது திடீர் திருமண முடிவால் உதயா படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து சிம்ரன் ஸ்டிரைக் செய்வது போல,ஜனனம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா திரிவேதியும் இன்ஸ்டன்ட் காதலில் விழுந்து, கல்யாணமும்செய்து கொண்டுவிட்டதோடு தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார்.

இதனால் பாடல் காட்சிகள் முடிக்கப்படாமல்படம் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு மும்பைக்குப் போய் விட்ட சிம்ரன், தான் முன்பு ஒத்துக் கொண்டிருந்தவிஜய்யின் உதயா படத்தில் நடிக்க மறுத்து இழுத்து வருகிறார்.

இதனால் தயாரிப்பாளர் நடராஜன் கோபத்தில்கொந்தளித்துப் போய் நிற்கிறார். கோர்ட்டுக்குப் போவேன் என்று மிரட்டியதையடுத்து அவரை நேரில் கூப்பிட்டுசமாதனம் செய்ததோடு பாடல் காட்சிகளை முடித்துத் தருவதாக வாக்குறுதி தந்துள்ளார்.

அதேபோன்ற நிலை தற்போது ஜனனம் படத்தின் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில்அருண்குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இதிலும் இரண்டு பாடல் காட்சிகள் அரைகுறையாக நிற்கின்றன.

இந் நிலையில் பிரியங்காவுக்கும் கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திராவுக்கும் திடீர் காதல் ஏற்பட்டது.உடனே இருவரும் திருமணமும் செய்து கொண்டுவிட்டனர். இதையடுத்து பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டபிரியங்கா இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துவிட்டார்.

இதையடுத்து பிரியங்காவின் வீட்டுக்கு தயாரிப்பாளர் போன் செய்தபோது, நான் இனிமேல் நடிக்க மாட்டேன்,வேண்டுமானால் என்னை மாதிரி உள்ள யாரையாவது டூப் போட்டு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாடல்காட்சிகளில் அந்த டூப் எப்படி கவர்ச்சி காட்டினாலும் எனக்குப் பிரச்சனையில்லை என்று கூற டென்சனில் போனைவீசி எறிந்தாராம் தயாரிப்பாளர் நூர்ஜஹான்.

இந்தப் பிரச்சனையை தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும், நடிகர் சங்கத்திற்கும் கொண்டு போகலாமா என்று அவர்டிஸ்கஸ் செய்து வருகிறார்.

பிரியங்காவின் திருமணத்தால் தயாரிப்பாளரை விட மிகவும் கோபத்த்தில் இருப்பது பிரியங்காவின் அம்மாதானாம். மகள் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொட்டுவாள் என்று நினைத்திருந்த அந்த வங்காளத் தாயின் கனவில்மண் விழுந்துவிட்டது.

இதனால் தயாரிப்பாளர் நூர்ஜகானை தொடர்பு கொண்ட அவர், என் மகள் பிரியங்காவின் உடல் வாகும்சோனியா அகர்வாலின் உடல் வாகும் ஒன்றாகத் தானே உள்ளது. அவரை வைத்து படத்தை முடிக்கலாமே என்றுயோசனை கூறியிருக்கிறாராம்.

ஒரு காலத்தில் திவ்ய பாரதி என்ற நடிகை திடீரென மர்மமாக இறந்து போக அவருக்கு டூப்பாக நடித்தவர் தான்ரம்பா. அதுவரை தெலுங்குப் படங்களில் குரூப் டான்சர்களில் ஒருவராக ஆடிக் கொண்டிருந்தார் ரம்பா என்பதுஉங்களுக்குத் தெரியும்தானே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil